எங்களுக்கு 160 சீட் கிடைக்கும்... ஜெ. அதிர்ச்சி அடைந்துள்ளார்..: விஜயகாந்த்
திருவாரூர்: மத்திய உளவுத்துறையின் கருத்துக் கணிப்புப் படி தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டாணிக்கு 160 இடங்களில் வெற்றி கிடைக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், மக்கள் நலக்கூட்டணி மற்றும் தேமுதிக, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்தும், அவரது மனைவியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய உளவுத்துறை அறிக்கை...
அதன்படி, தர்மபுரியில் பிரேமலதா மேற்கொண்ட பிரச்சாரத்தில், ‘மத்திய உளவுத்துறையின் அறிக்கை ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் முதல்வராவதும் கூட்டணி தலைவர்கள் அமைச்சர்கள் ஆவதும் உறுதி. இந்த கூட்டணி தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை தரப்போகிறது' என அதிரடியாகத் தெரிவித்திருந்தார்.

குழப்பம்...
மத்திய உளவுத்துறை எப்போது கருத்துக்கணிப்பு நடத்தியது. அது எப்படி தேமுதிகவிற்கு மட்டும் கிடைத்தது என மற்ற கட்சிகள் யோசித்து, குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில், பிரேமலதாவின் பேச்சை உண்மை என்பது போல, மீண்டும் வழிமொழிந்திருக்கிறார் விஜயகாந்த்.

அண்டப் புளுகு... ஆகாச புளுகு
இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். ஜெயலலிதா அண்ட புளுகு என்றால், கருணாநிதி ஆகாச புளுகு.

கோபம் இருக்கும் இடத்தில் குணம்...
காமராஜர்படிக்கச் சொன்னார். ஜெயலலிதா, மக்களை குடிக்கச் சொல்கிறார். விஜயகாந்த் அடிக்கிறார் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கட்சிக்காரர்கள் தவறு செய்யும்போது, அதை தட்டிக் கேட்கிறேன்.

160 இடங்கள்...
மத்திய உளவுத் துறை கருத்துக்கணிப்பு, தே.மு.தி.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு, 160 இடங்கள் கிடைக்கும் என, தெரிவித்துள்ளது.

ஜெ. அதிர்ச்சி...
மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.,வுக்கு, 50 இடங்களும், தி.மு.க.,வுக்கு, 25க்கும் குறைவான இடங்களுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்சியினர் கருத்துக் கணிப்பை நம்பியுள்ளனர். என் கணிப்பு, தமிழ் மக்கள் தான்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications