தீபாவுடன் இணைந்து செயல்படுவோம்.. சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என ஆயிரக்கணக்க்கான தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஆனால் திடீரென சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அரசியல் செய்ய ஆரம்பித்ததும் தீபாவுக்கு மவுசு குறைந்து ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள் குவிந்தனர்.

இதனிடையே கடந்த 24ஆம் தேதி தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செம்மலை கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி நீதி விசாரணை நடத்தக் கோரி, குடியரசுத் தலைவரிடம், எங்கள் அணியைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்து உரிய ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் விரைவில் அளிக்க இருக்கிறோம்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் போராடியவர்களை கைது செய்த காவல்துறைக்கும் செம்மலை கண்டனம் தெரிவித்தார்
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications