வேட்டியை கழட்ட சொன்னால் எப்படிங்க? - ஆர்.பி.உதயகுமார் "அட" பேச்சு!
சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மதுரை: சட்டை, பனியனை கழட்டி வைத்து விட சொன்னார்கள்.. செய்தோம். இப்போ, வேட்டியையும் கழட்டி வைத்து விட்டு வரச் சொன்னால் எப்படி என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நகைச்சுவையாக பேசினார்.
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை இதோ, அதோ என போக்கு காட்டிய நிலையில் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி கொண்டனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை விதிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

ஓபிஎஸ் அணியினரோ தாங்கள் விதித்த இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற முனைப்பில் உள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நிலவி வந்தது. இதனிடையே திருப்பரங்குன்றத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று மே தின கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், சட்டை பனியனை கழட்டி வைத்துவிட சொன்னார்கள். அதை செய்தோம். பின்னர் வேட்டியை கழட்டி வைத்து விட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை என்கிறார்கள். அது எப்படி முடியும்.
நீங்களும் வேட்டி சட்டையுடன் வாங்க, நாங்களும் வர்றோம். இருவரும் இணைந்து இரட்டை இலையை மீட்போம். அதை விட்டு விட்டு அவர்களை விலக்கி வைங்க, இவர்களை விலக்கி வைங்க. அவர்களை உள்ளே போடுங்க, இவர்களை உள்ளே போடுங்க என்று கூறுகிறார்கள். அப்படிக் கூற நீ யார்?
நிபந்தனைகளின்றி பேச முன்வந்தால் நாங்கள் தயார் என்றார் அவர். அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டியபோது உண்மையான விசுவாசத்தை ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து கற்றுக் கொண்டோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது நீ வா போ என்ற ரேஞ்சுக்கு டக்கென இறங்கி விட்டார் என்பதும் முக்கியமானது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications