புதிய "ரமணன்" பிரதீப் ஜான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெதர்மேன் பிரதீப் ஜான், புதிய ரமணனாக உருவெடுத்த ஆண்டு 2017.
வானிலை நிலவரங்களை கணித்து கூறுவதில் இந்திய வானிலை மையம், சென்னை வானியை மையத்திற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது வெதர் ப்ளாக்கரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் கணிப்புகள். வடகிழக்குப் பருவமழை குறித்து இவர் முன்வைத்த கணிப்புகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது.

வடகிழக்குப் பருவமழையின் போது மழையின் நிலவரம் எப்படி இருக்கும், எந்தெந்த பகுதிகளில் மழை அதிக அளவில் இருக்கும் என்பதை ஆதாரங்களுடன் டுவிட்டர் மற்றும் முகநூலில் வெளியிட்டதன் மூலம் தனியார் வெதர்மேனான பிரதீப் ஜானிற்கு பாராட்டுகள் குவிந்தன.












Click it and Unblock the Notifications