ஒரே தண்ணியும், குப்பையுமா இருக்கு: 2 சுகாதாரத் துறை அதிகாரிகளை சுற்றி வளைத்த மே. மாம்பலம் மக்கள்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வெள்ளத்தால் நீர் தேங்கியிருப்பதுடன் திரும்பும் பக்கம் எல்லாம் குப்பையாக இருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சியை சேர்ந்த 2 சுகாதாரத் துறை அதிகாரிகளை சுற்றி வளைத்தனர்.
சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான மேற்கு மாம்பலம் மக்கள் ஏற்கனவே அரசு மீது கடுங் கோபத்தில் உள்ளனர்.

தண்ணீரில் தத்தளிப்போரை காப்பாற்ற அரசு அதிகாரிகள் வராவிட்டாலும் டாஸ்மாக் கடையை மட்டும் திறந்து வைத்துள்ளனர் என்று மேற்கு மாம்பலம் மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றது. இந்நிலையில் அந்த பகுதி மக்கள் மாநகராட்சியை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் இருவரை சுற்றி வளைத்து கோஷமிட்டனர்.
மக்களின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிற அதிகாரிகள் வந்து அவர்களை மக்களிடம் இருந்து காப்பாற்றினர்.


Click it and Unblock the Notifications
