மீண்டும் மழை.. 30ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யுமாம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஒரு மழைக்காலம் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையிலும் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் உள்ளது.

மழை நிலவரம் குறித்து வானிலை மையத் தரப்பில் கூறுகையில், தென் மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது.
இதனால் நாளை முதல் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யும். 30ம் தேதி முதல் கன மழை பெய்யும். தரைக் காற்று அதிகம் வீசும். சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் இரவில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடும் வாடைக் காற்று வீசுடன் குளிரும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை தூற ஆரம்பித்திருக்கிறது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications