குஷ்பு இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: திமுகவின் பிரச்சார பீரங்கி குஷ்பு இப்போது வீட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த குஷ்புவை நேற்றுமுதல் பிரசார களத்தில் பார்க்க முடியவில்லை. உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறப்பட்டாலும், திமுக குறித்தே விமர்சனம் செய்து உளறிக்கொட்டி குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதுதான் அவரை கட்டாய ஓய்வெடுக்க வைக்க காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலம் சரியில்லாத குஷ்பு தீவிர ஓய்வில் இருப்பார் போல என்று நினைத்து அவரது டுவிட்டர் பக்கம் சென்று பார்த்தால், வீட்டில் ரொம்ப பிசியாக இருப்பது தெரிகிறது. இன்று காலையில் குஷ்பு செய்துள்ள டிவிட்டில் அழகான சூரிய உதயம், மலர்கள் நாட்டியமாடும் தோட்டம் என எனது காலை இனிதாக விடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, வீட்டு தோட்டத்தில் எடுத்த விதவிதமான மலர்களின் புகைப்படங்கள், காய்த்து தொங்கும் மாங்காய்கள் போட்டோக்களை அப்லோட் செய்து வைத்திருந்தார். இதுபோதாதென்று நண்பர் வட்டத்தில் ஒருவர் ஷேர் செய்திருந்த நான் சிகப்பு மனிதன் சினிமா விமர்சனத்தை இவரும் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications