சீனுக்கு வந்த ஜெயக்குமார்.. செந்தில் பாலாஜி ரெய்டு பற்றி சொன்னது என்ன தெரியுமா? சிக்குவார்களாம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது. கரூர், சென்னை, கோவை, ஹைதராபாத் எனப் பல இடங்களில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்..
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ஐடி அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஜெயக்குமார்:
பொதுவாகச் சோதனைக்கு ஒரு மணி நேரம் முன்பு பாதுகாப்பு கேட்கப்படும் என்று கூறிய போலீசார், ஆனால், இன்று அப்படி யாரும் பாதுகாப்பு கோரவில்லை என்றும் சோதனை குறித்த அறிந்தவுடன் இப்போது 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த ரெய்டு குறித்தும் அதைத் தொடர்ந்து நடந்த பரபர சம்பவம் குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கரூர் மாவட்ட எஸ்பி மீதும் தவறு இருக்கிறது.. ஐடி ரெய்டிற்கு போலீசார் உரியப் பாதுகாப்பு தரத் தவறியுள்ளனர்.. போலீசார் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்வது தவறு.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே ரெய்டு நடக்கிறது என்பது தெரிகிறது. இவருக்குத் தெரியவில்லை என்று சொல்வது தவறு. போலீசார் உரியப் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதே உண்மை.
போலீசார் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, போலீசாருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செந்தில் பாலாஜி தூண்டுதல்:
மேலும், அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது.
எனவே, அரசு அதிகாரிகளை பணியைச் செய்ய விடாமல் குற்றச்சாட்டில் திமுக தொண்டர்கள் மீது மட்டுமின்றி.. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கரூர் எஸ்வி மீதும் தவறு இருக்கிறது. எனவே. அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாரும் சிக்குவார்கள்:
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும் போது இந்த ரெய்டு நடந்துள்ளது. தேன் கூட்டில் கையை வைத்துள்ளனர். இதன் பின்னர் பல விஷயங்கள் வெளியே வரும். அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். அலி பாபாவும் 40 திருடர்கள் என்ற படத்தைப் பார்த்து இருப்பீர்கள். அதுபோலத் தான் இவர்களும் இப்போது இருக்கிறார்கள்.
அலிபாபா வெளிநாட்டிற்குப் போய் உள்ளார். மற்ற 35 பேரும் இங்கே இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்திலும் ஊழல் செய்து ஊழல் திமிங்கிலமாக உள்ளனர். இனிமேல் வரிசையாக அனைவரும் செய்த தவறுகளால் சிக்கத் தான் போகிறார்கள்" என்றார். ரெய்டு தொடரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications