மத்திய - மாநில அரசை விடாத திருமாவளவன்! மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானம் நிறைவேற்றம்.. முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: பெரும் விவாதத்தை கிளப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு என்பது உளுந்தூர்பேட்டையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் திமுக உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 12 முக்கிய தீர்மானங்களை திருமாவளவன் நிறைவேற்றி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் மாநாடு அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க அதிமுகவுக்கும் திருமாளவளவன் அழைப்பு விடுத்தார். அதேபோல் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அழைப்பு விடுத்தார்.

vck anti liquor conference


இது விவாதத்தை கிளப்பியது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவை திருமாவளவன் அழைத்தது கூட்டணி மாறுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது.

இது பெரிய விவாதமான நிலையில் திருமாவளவன், ஸ்டாலினை சந்தித்து திமுகவை மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதனால் பிற கட்சிகள் இன்றி திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இன்று உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாடு தொடங்கியதும், விசிக தலைவர் திருமாவளவன் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டின் 12 தீர்மானங்களை மேடையில் வாசித்தார். அந்த தீர்மானங்கள், தேசிய அளவில் மதுவிலக்கு தேவை என்பதையும், தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்மானங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மேடையில் வாசித்து முன்மொழிந்தார். அதன்பிறகு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் விபரம் வருமாறு:

தீர்மானம் 1: அரசமைப்பு சட்டம் உறுப்பு எண் 47-ல் கூறியுள்ளது போல் மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் 2: மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.

தீர்மானம் 3: மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு வேண்டும்.

தீர்மானம் 4: மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை அமைத்திட வேண்டும்.

தீர்மானம் 5: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூடுவதற்கு வசதியாக உரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.

தீர்மானம் 6: தமிழ்நாட்டில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

தீர்மானம் 7: மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்திட வேண்டும்.

தீர்மானம் 8: குடி நோயாளிகள் மற்றும் போதை நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி மையங்களை உருவாக்க வேண்டும்.

தீர்மானம் 9 : மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.

தீர்மானம் 10: டாஸ்மாக் எனும் அரசு மதுபான கடையின் வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.

தீர்மானம் 11: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்ய வேண்டும்.

கடைசி தீர்மானம்: மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மட்டும் ஈடுபட்டால் போதாது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய கேடாக அமைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்துவதும், தமிழக மக்களை போதைப்பொருட்களில் இருந்து மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு மட்டும் அல்ல. அனைத்து தரப்பு மக்களின் கடமையாகும் என்று மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+