For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன? கடைசி அறிக்கை கவலைப்படுத்துவது ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன?- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இதுவரை 6 அறிக்கைகளை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

    கடந்த மாதம் 27ம் தேதி நள்ளிரவில், கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து 28ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    What are the matters mentioned in Kauvery hospital bulletins

    ஜூலை 28ம் தேதி இரவு 8 மணிக்கு 2வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.

    ஜூலை, 29ம் தேதி இரவு 9.50க்கு 3வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகி வருகிறது.

    ஜூலை, 31ம் தேதி, மாலை 6.30 மணிக்கு 4வது அறிக்கை: கருணாநிதியின் கல்லீரல் தொற்று தொடர்பாக சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக மேலும் சில நாட்கள், அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.

    ஆகஸ்ட் 6ம் தேதி, இரவு 6.30 மணிக்கு 5வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக மாறியுள்ளது. 24 மணி நேரத்திற்கு மருத்துவ உதவிகளுக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும்.

    இவ்வாறு 5 அறிக்கைகளும் கூறியுள்ளன. இதில் 5வது அறிக்கை மட்டுமே, கவலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. ஏனெனில் அதில்தான், மருத்துவர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    English summary
    What are the matters mentioned in Kauvery hospital bulletins till now?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X