நினைக்கும் போதெல்லாம்திறந்துவிட காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சரின் பேச்சால் அதிருப்தி
நினைக்கும் போதெல்லாம் திறந்துவிட காவிரி எனது பாக்கெட்டிலா உள்ளது உன அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கும்பகோணம்: நினைக்கும் போதெல்லாம் திறந்துவிட காவிரி எனது பாக்கெட்டிலா உள்ளது உன அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் என கூறி குண்டை தூக்கி போட்டார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்தனர்.

துரைக்கண்ணு சர்ச்சை
அந்த சர்ச்சை அடங்குவதற்குள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்.

திமுகவை விளாசினார்
அப்போது பேசிய அவர் திமுகவை சரமாரியாக விளாசினார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு தெரியவில்லை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீர் எத்தனை நாளைக்கு வரும் என சாதாரண மக்களுக்கு தெரியும் நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை என சாடினார்.

எங்கள் வீட்டு குழாயா?
மேட்டூர் அணையில் இருந்து நினைத்த போதெல்லாம் தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி என்ன என் பாக்கெட்டிலா உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் மேட்டூர் அணை என்ன எங்கள் வீட்டு குழாயா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் அலட்சிய பேச்சு
மேட்டூர் அணையில் இருக்கும் நீரை திறந்தால் நான்கு நாளைக்கு தான் வரும். அதை நம்பி எப்படி விவசாயம் செய்யமுடியும் என்றும் அமைச்சர் துரைக்கண்ணு கேள்வி எழுப்பினார். மூன்று ஆண்டுகளாக குருவை சாகுபடி செய்யமுடியாமல் போன நிலையில் அமைச்சரின் இந்த அலட்சிய பேச்சு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications