பெட்ரோல், டீசல் விலை...நாளை முதல் தினசரி மாற்றம்...கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பெட்ரோல் டீசல் தினசரி விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கும் மற்றொன்றிற்கும் கூட விலையில் ஏற்ற, இறக்கம் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை முதல் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை மாற்றம் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவற்றிற்கும் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையம் விற்பனை மையத்திற்கு அருகிலேயே இருந்தால் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரப்படி போக்குவரத்து செலவும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும். மாறாக விற்பனை மையமும், எண்ணெய் நிரப்பும் மையமும் இருக்கும் தூரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 10 காசுகள் வரை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

கட்டாயம் தேவை

கட்டாயம் தேவை

பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள் பெட்ரோல் நிலையங்கள் கண்டிப்பாக வாசலில் வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் வைக்க வேண்டும். நாள்தோறும் எண்ணெய் விநியோகிஸ்தர்களுக்கு இரவு 8 மணியளவில் புதிய விலை தெரிவிக்கப்படும் என்றும் நள்ளிரவு 12 மணி முதல் மாற்றம் செய்யப்பட்ட புதிய விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக

வாடிக்கையாளர்கள் வசதிக்காக

தினசரி விலை மாற்றம் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை குறைவு அன்றே அமலுக்கு வந்து விடும். இதற்கு முன்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகார் அளிக்கலாம்

புகார் அளிக்கலாம்

இதே போன்று விலை விவரத்தை காட்சிப்படுத்தாத பெட்ரோல் நிலையங்கள் குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். அந்தப் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தியாகவும் பெறலாம்

குறுஞ்செய்தியாகவும் பெறலாம்

வாடிக்கையாளர்கள் தங்களது பகுதியில் பெட்ரோல் பங்குகளில் உள்ள விலையை எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விற்பனை மைய டீலரின் எண் நிரப்பு நிலையத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கும், அதனை சேமித்து வைத்துக் கொண்டு SMS RSPDEALER CODE என பதிவு செய்து 92249-92249 எண்ணிற்கு அனுப்பியும் விலை நிலவரத்தை பெற முடியும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol, diesel prices are set to be revised daily starting June 16. Oil companies and retailers will change fuel rates across the country every day depending on the fluctuations in international oil prices
Please Wait while comments are loading...