நீங்கள் ஒரு நாளும் பெண்ணாக முடியாது!
நான் யாரென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவள் தான் நான். நீ தெருவில் சென்று கொண்டிருக்கிறாய்... சிவப்பு நிற சுடிதாரில் மஞ்சள் நிற துப்பட்டா பறக்க காதுகளில் ஜிமிக்கி அசைய உன்னை கடந்து செல்கிறாளே அவள்தான் நான். ஜீன்ஸிலும், ஃபார்மல் ஷர்டிலும் தலைமுடியை இறுக்கி கொண்டை போட்டு, அலைபேசியில் தீவிரமாய் பேசிக் கொண்டு ரோட்டை கடக்கிறாளே அவள்தான் நான். நான்தான் ஸ்வாதி, நான்தான் வினு ப்ரியா, நான்தான் வினோதினி, நான்தான் நிர்பயா... நான்தான் பெண்!
நீ பேருந்துகளில் செல்வாயென்றால் ஒரு நிமிடம் சுற்றிலும் பார். எத்தனை பெண்கள், அவர்கள் தோளில் ஹேண்ட் பேக்கோடு ஏதாவது கனவினையும் சேர்ந்து சுமந்து செல்பவர்கள்!. .
உனக்கு இருக்கும்தானே, வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும், உன் குடும்பதை காப்பாற்ற வேண்டும் என்று.. அப்படி அவளுக்கும் அதே கனவுகள் இருக்கிறது.

நீ பார்க்கும், தலை முடி பறக்க, சிரித்து சிரித்து போகும் ஒவ்வொரு பெண்ணும் எந்த கவலையும் இல்லாமலா சாலையில் செல்கிறாள்?. எல்லா பெண்களும் வேலை செல்லும் கனவிற்காகவும், பொழுது போக்கிற்குமே வேலைக்கு செல்வதில்லை தோழனே! அவளுக்கு பின்னால் அவளின் பெற்றோரின் கடன், தங்கை தம்பியை படிக்க வைக்கும் பொறுப்பு என ஏராளமான சுமைகள் இருக்கும்.
இப்படி ஒருவகை இருக்க, பொறுப்பில்லாத கணவன் இருப்பதாலோ, பொருளாதார பிரச்சனைகளாலோ, வேலைக்கு செல்லும் பெண்களை நீங்கள் பார்த்ததுண்டா? பார்த்திருப்பீர்கள். ஆனால் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை. வீட்டிலிருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அவள் தினம் தினம் சந்தித்துதான் வேலைக்கு போகிறாள். இது சினிமா நிகழவல்ல மிகைப்படுத்த. அத்தனையும் தெளிவான உண்மை.
அவளது குடும்பம் எங்கேயோ ஒரு சிற்றூரில் இருக்க, இங்கே பாழும் நகரங்களில் வேலைக்காக தங்கும் பெண்கள்தான் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும். கற்பை பற்றி எல்லாம் நினைப்பு தாண்டி, அவள் உயிரோடுதான் இருப்பாளா என்று அவளது பெற்றோரின் வயிற்றில் நெருப்பை கட்ட வைத்துவிட்டீர்கள்
இப்போது உன் விஷயத்திற்கு வருகிறேன். 20+ வயதுகளில், 40 வயது பெண்ணிடம் காமத்தை தேட முயல்கிறாய். 60+களிலும் 20 வயது பெண்ணிடம் அதே காமத்தை பேச முயல்கிறாய்.
வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடும்ப நிர்வாகம் பார்த்துக் கொண்டால், " அவளுக்கென்ன, புருஷன் சம்பாத்யத்துல சொகுசா இருக்கா" என்று சொல்கிறாய். வேலைக்கு சென்றால் " "குடும்பத்தை கவனிக்காம, வேலைன்னு வெளியே ஊர் சுத்த போயாச்சு " என்று சொல்கிறாய்.
உனக்கு என்னதான் வேண்டும் பாஸ்? எங்களை அடக்கி வாழ்வதா? ஆம் என்றால் இத்தனை காலங்களில் எங்களை அடக்கி வாழ்ந்து உங்கள் மூதாதையர் என்ன சாதித்தார்கள் என பட்டியலிடு... இல்லை என்று சொன்னால் பின் எதற்கு இத்தனை துவேஷம் எங்களின் மேல்?
உன் பிரச்சனை என்ன?
பெண் என்பவள் அற்புதமானவள், தேவதை, தெய்வம், அதிசயப் பிறவி என்று நான் சொல்லவில்லை. இப்படியெல்லாம் நீங்கள்தான் சொன்னீர்கள். சொல்கிறீர்கள்.. சொல்லிக் கொண்டுதானிருப்பீர்கள்.... நான் எப்போதும் சொல்லிக் கொள்ளவில்லை. ஏனெனில் நான், பொறாமை, திமிர், அன்பு, கோபம் எல்லாம் கலந்த சராசரி மனித உயிரினம் உங்களைப் போல. அவ்வளவே!
எனக்கு பிடிக்கவில்லை என்பது எனது உரிமைதானே. அதை தாங்க முடியவில்லை உன்னால்... ஆசிட் வீசுவாய், அரிவாளால் வெட்டுவாய், ஆபாசமாய் சித்தரிப்பாய். உனது கோபம் என்பது ஒரு உயிரை சிதைப்பதில்தான் அடங்கி விடுகிறதா? அப்படியெனில் அத்தனை கொடூரமானவனா நீ? இத்தனை பலவீனமானவனா நீ? உன்னை ஒரு நாளும் வயிற்றில் கருவில் கூட நான் சிதைக்க ஆசைப்பட்டதில்லையே?
நானும் அறிவேன் என்னை பாதுகாக்கும் சகோதரர்களை... பயப்படாதே ஒன்றும் செய்து விட மாட்டேன் என்ற பரிவினை அவன் கண்களில் தனியே பயணிக்கும் போது பார்த்திருக்கிறேன். எந்த கயவனையும் நீ தட்டிக் கேப்பாய் என்ற துணிச்சலில்தான், அந்த நம்பிக்கையில்தான் நான் வெளியே வருகிறேன். ஒரு சகோதரனாய், தோழனாய் நீ இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை.? இந்த பிரபஞ்சத்தில் ஆறறிவு படைத்தவர்களில் நீயும் நானும் மட்டும்தானே உலவுகிறோம். பின் எதற்கு என் மீது இத்தனை துவேஷம்? அடக்குமுறை? வன்முறை?
உன்னை நான் அவமானப்படுத்துகிறேனென்றால், என் முன்னால் நீ வாழ்ந்து காட்ட வேண்டும். அது உன் ஆண்மை... என்னை சிதைப்பாயென்றால் அது குரூரம். நீ பலவீனமானவன். இரண்டில் ஒன்றுதான் உன் சாய்ஸ். இதுதான் உன் குணத்தையும் வாழ்வையும் பறைசாற்றும்.
அயர்ச்சியாய் இருக்கிறது பாஸ்! பாரதியார், பெரியார் போதாது என்கிறீர்கள்...இன்னும் யார் வந்து உங்களிடம் சொல்ல வேண்டும்? ஒரு மரணத்தில் கூட அவளின் குணங்களை, நடத்தையை நீங்களாகவே உருவகப்படுத்துகிறீர்கள். ஜாதி மதம் என பிணத்தின் மீது வேஷம் கட்டுகிறீர்கள்..
எங்கள் உணர்ச்சிகளை.. வலி மிகுந்த எங்கள் மனங்களின் கூவல்களை ஒரு நாளும் நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று எனக்கு தெரியும். ஏனெனில் நீங்கள் ஒரு நாளும் பெண்ணாக முடியாது!
- உங்கள் சகோதரி
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications