சென்னை சுற்றுலா பயணிகள் 7 பேரும் விபத்துக்குள்ளானது எப்படி.. பரபரப்பு பின்னணி!

மசினகுடி சாலை விபத்து குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 7 பேரும் விபத்தில் சிக்கி பலி!- வீடியோ

    ஊட்டி: சென்னையிலிருந்து நீலகிரி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரும் விபத்தில் சிக்கியது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை சேர்ந்தவர்கள் ராமஜோஸ், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அருண், அகர்வால், ஜூடி. இவர்கள் 7 பேரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊட்டிக்கு வந்தனர். ஸ்டெர்லிங் என்கிற ஸ்டார் ஓட்டலில் இவர்கள் தங்கி இருந்தனர்.

     ஹோட்டல் திரும்பவில்லை

    ஹோட்டல் திரும்பவில்லை

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை இவர்கள் தங்கள் அறையைவிட்டு மசினகுடி செல்வதாக ஓட்டல் ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அன்று இரவு நீண்டநேரம் முழுவதும் அறைக்கு 7 பேரும் திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், போலீசில் புகார் ஏதும் அளிக்காமல் தகவலை மட்டும் சொல்லி இருக்கிறார்கள்.

    [7 பேர் மாயமான மசினகுடியின் மறுபக்கம்.. ஒரு பக்கம் அழகு.. இன்னொரு பக்கம் அபாயம்! ]

     செல்போன் சிக்னல்

    செல்போன் சிக்னல்

    இதனிடையே 7 பேரின் குடும்பத்தார்களும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து விசாரித்தபடியே இருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மசினகுடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயாறு என்ற என்ற இடத்தில் செல்போன் சிக்னல் இருந்தது தெரியவந்தது.

     மாயாறு பள்ளத்தாக்கு

    மாயாறு பள்ளத்தாக்கு

    இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனவிலங்குகளால் 7 பேருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ வனத்துறை, காவல்துறை என அனைவருமே மாயாறு பள்ளத்தாக்கில் தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

     35-வது வளைவு

    35-வது வளைவு

    இறுதியில் 7 பேரும் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக கண்டறியப்பட்டது. நேற்றுமுன்தினம் ஹோட்டல் அறையைவிட்ட புறப்பட்ட இவர்கள் மசினகுடிக்கு செல்லும் 35-வது கொண்டை ஊசி வளைவில் காரில் சென்று கொண்டிருந்தனர். அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. அப்போது, காரில் பிரேக் பழுதடைந்ததாக தெரிகிறது. இதனால் கார் அங்கிருந்த மாயாறு பள்ளத்தாக்கை நோக்கி கீழே விழுந்துள்ளது.

     2 பேர் பலி

    2 பேர் பலி

    இன்றுதான் இதுகுறித்த தகவல் தெரிய வந்ததைத் தொடர்ந்து மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். அங்கு விபத்துக்குள்ளான காருக்குள் 7 பேரும் சிக்கியிருந்தனர். அவர்களில் 2 பேரின் உடலில் அசைவு தெரிவதால் அவர்கள் உயிருடன் இருக்கலாம் என அனுமானிக்கப்படது. இதையடுத்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

     மீட்பு பணியில் போலீசார்

    மீட்பு பணியில் போலீசார்

    விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் சென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் ஒருவரின் அக்கா மகன் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+