வேளாங்கண்ணியில் டிரம்ப் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.. கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு இப்படியா ஆகணும்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அகரஒரத்தூர் கடைத்தெருவில், வெனிசுலா அதிபர் கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் நன்மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்ததது அப்போது வேர்குடி கிளைச்செயலாளர் கல்யாணசுந்தரம் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அகரஒரத்தூர் கடைத்தெருவில், வெனிசுலா அதிபர் கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் நன்மாறன் தலைமையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்க முயன்றார்கள்.

அப்போது வேர்குடி கிளைச்செயலாளர் கல்யாணசுந்தரம்(வயது 45) என்பவரின் மீது பெட்ரோல் சிதறி, அவரது கைலியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது இரு கால்களிலும், இடது கை முட்டிக்கு கீழும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசாரும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் தீக்காயம் அடைந்த கல்யாண சுந்தரத்தை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற கல்யாண சுந்தரம் கடந்த 13-ந்தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கல்யாணசுந்தரத்திற்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக கடந்த 25-ந்தேதி தேதி ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தசம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications