குடை ரெடியா? அடுத்த 48 மணிநேர சென்னை வானிலை நிலவரம் இதுதான்! ஏப்.30, மே 1ல் எங்கெங்கு கனமழை.. அலர்ட்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதோடு கனமழை பெய்யும் மாவட்டங்களில் பட்டியலையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் தான் தற்போது கோடை மழை தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஓரளவு வெயிலின் பிடியில் இருந்து தப்பித்துள்ளனர்.

இன்றும் காலை முதல் தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து குளுமையான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று முதல் நாளை மறுநாள் வரை: தென்இந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழககு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதகிளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 20 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை (ஏப்ரல் 28)மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 30, மே 1 நிலவரம்: அதன்பிறகு ஏப்ரல் 30ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மே மாதம் 1ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றம் காரைக்கால் பகுதகிளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: சென்னை மற்றுமு் புறநகர் பகுதிகளை பொறத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36.37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27.28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கம்.
எங்கு மழை அதிகம்: கடந்த 24 மணிரேநத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புதுக்கோவை மாவட்டம் வம்பன் கேவிகே, கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை பகுதிகளல் தலா 6 செமீட்டர் மழை பதிவானது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications