சிக்கிய சிறுத்தை எச்சம்! மயிலாடுதுறையில் 6 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை எங்கே உள்ளது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கிட்டத்தட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்கும் இடம் உத்தேசமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறையில் 6வது நாளாக பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே சிறுத்தையின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாம்.

What is the current location of leopard found in Mayiladuthurai

நீர் தேவை காரணமாகவும், கடுமையான வெயிலை சமாளிக்கவும், நீர்வழி புதர்களில் அது பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கே பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

உள்ளே வந்த சிறுத்தை: மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து நான்கு நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை.

இப்போது எங்கே இருக்கிறது?: மயிலாடுதுறையில் கிட்டத்தட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்கும் இடம் உத்தேசமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறையில் 6வது நாளாக பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்னொரு பக்கம் ஆடுகள் மரணம்: இன்னொரு பக்கம் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் நுழைந்துள்ள சிறுத்தை இடம் மாறி சென்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தர்காட்டில் மர்மமான முறையில் ஆடு செத்து கிடந்த நிலையில் அதனை சிறுத்தை அடித்து கொன்றதா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். கிராமத்தில் பதிவாகி இருந்த சிறுத்தையின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணிக்கு மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் இரவு பகலாக மயிலாடுதுறையில் தீவிரமாக சிறுத்தையை தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் சிறுத்தை தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் ஆடு ஒன்று செத்து கிடந்தது. அந்த ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் அங்கே உள்ள பகுதிகளில், நீர் படுகைகளில் தேடுதல் வேட்டை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+