'சின்னம்மா' ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. ஓ.பி.எஸ்க்கு ஒரு நியாயம், ஜெயா ப்ளஸ்க்கு ஒரு நியாயமா?
ஓ.பன்னீர்செல்வம் எதிரணியாக செயல்பட்டதற்கு திமுகதான் காரணம் என்று சொன்ன சசிகலா அணி இன்று அவர்களின் தொலைக்காட்சியில் துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பியுள்ளது.
Recommended Video

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்த போது திமுகவினைரை பார்த்து சிரித்தார் என்று சொன்னார் சசிகலா, ஆனால் இன்று அவர்களது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது சின்னம்மாவிற்கு தெரியுமா?
சசிகலா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியதும் சைலன்டாக பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம். திடீரென பிப்ரவரி 7ம் தேதி இரவு ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு வந்து சசிகலா குடும்பம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக கூறினார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதில் உள்நோக்கம் இருப்பதாகச் சொன்னார் சசிகலா. ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் திமுகவினரை பார்த்து சிரித்த போது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், மற்ற அமைச்சர்கள் இது பற்றி கூறிய போது பொருத்திருக்கலாம் என்று சொன்னதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

ஓ.பிஸ் எதிர்ப்பு சசி சொன்ன காரணம்
மேலும் தொடர்ந்து திமுகவின் ஆதரவு இருப்பதாலேயே ஓ.பன்னீர்செல்வம் துணிந்து செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டினார். திமுகவினரை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததற்கே கடுமைகாட்டிய சசிகலா, இன்று தன்னுடைய குடும்பத்தார் நிர்வகிக்கப்படும் ஜெயா தொலைக்காட்சியில் திமுக சீனியர் தலைவரின் நேர்காணல் ஒளிபரப்பபட்டதற்கு என்ன சொல்வார்.

ஜெ. சேலையை கிழித்ததாக குற்றச்சாட்டு
அதிலும் 1989ம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் தன் சேலையைப் பிடித்து இழுத்தார். இதனால் என் சேலை கூடக் கிழிந்து விட்டது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டிய திமுக சீனியர் ஒருவரின் பேட்டி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

என்ன சொல்வார் சசி?
எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியிலும், ஜெயா டிவி நடுநிலையான சேனல் என்பதை காட்டிக் கொள்வதற்காகவும் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதா. அல்லது என்ன நடந்தாலும் சரி எப்படியாயினும் முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி அரசை வீட்டிற்கு அனுப்பியே ஆக வேண்டும் என்பதற்காக எதைச் செய்தாலும் பரவாயில்லை என்ற துணிவிற்கு சசி குடும்பம் வந்துவிட்டதா என்று பல்வேறு கேள்விகளை இந்த துரைமுருகன் நேர்காணல் ஒளிபரப்பு எழுப்பியுள்ளது.

விவேக்கின் சதுரங்கமா?
ஜெயா டிவியின் நிர்வாகம் முழுவதும் விவேக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், வருமான வரி சோதனை நடந்து முடிந்த ஒரு வாரத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக சீனியரின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அப்படியானால் இது விவேக்கின் சதுரங்க அரசியல் ஆட்டமா என்ற சந்தேகமும் எழுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications