"டைம் வேஸ்ட்.." அண்ணாமலை குறித்த கேள்வி.. ஒரே வரியில் பதிலளித்த அதிமுக Ex அமைச்சர் எஸ்பி வேலுமணி
பொள்ளாச்சி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்பி வேலுமணி பதிலளித்துள்ளார்.
கடந்த காலங்களில் லோக்சபா தேர்தல்களில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருந்துள்ளது. ஆனால், இந்த முறை பாஜக தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது.

தொடக்கத்தில் அதிமுக தலைவர்கள் பெரியளவில் பாஜக குறித்து விமர்சிக்காமல் இருந்தனர். இதை வைத்து அதிமுக- பாஜக இடையே மறைமுகமாகக் கூட்டணி இருப்பதாக திமுக விமர்சிக்கத் தொடங்கியது.
அண்ணாமலை: அதன் பிறகு அதிமுக தலைவர்கள் பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அதற்கு பாஜக தரப்பும் பதிலடி தரவே மாறி மாறி காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பேசுபொருள் ஆனது. இதற்கிடையே இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பதிலளித்துள்ளார்.
எஸ்பி வேலுமணி: பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தேர்தல் களம் சிறப்பாக இருக்கிறது. இந்த பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கோவைக்குக் கொடுத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி எடப்பாடி முதல்வராக இருந்த போதும் சரி கோவைக்கு தேவையான பல திட்டங்களைக் கொடுத்துள்ளார்கள்.
கோவைக்குத் தேவையான சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு அவினாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம் எனப் பலவற்றை சொல்லலாம். அதேபோல பொள்ளாச்சியில் போட்டியிடும் வேட்பாளரும் நல்ல அனுபவம் கொண்டவர். மக்களிடையே அதிமுகவுக்கும் எடப்பாடிக்கும் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இன்று கோவையில் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பி தேர்வானால் மட்டுமே தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற முடியும். மாநிலத்திற்கும் அது பெரியளவில் உதவும்" என்றார்.
தேர்தல் களம்: தேர்தல் களம் குறித்த கேள்விக்கு, "இங்கே இரு முனை போட்டி மட்டுமே. திமுக அதிமுக இடையே மட்டும் தான் போட்டி. பாஜகவுக்கு 3ஆவது இடம் தான். அவர்களுக்கு இருப்பதே 3 முதல் 4 சதவிகித வாக்குகள் தான்.. அதை வைத்துக் கொண்டு போட்டி என எப்படிச் சொல்ல முடியும். அவர்கள் தனியாக நின்றால் அவர்கள் பலம் தெரியும். அதிமுக உடன் கூட்டணி இருந்ததால் மட்டுமே 4 சட்டசபை இடங்களில் வென்றனர். போட்டி என்பது திமுக அதிமுக இடை மட்டுமே. அதிலும் அதிமுகவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது" என்றார்.
பாஜக: தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மிகத் தெளிவான பதிலை அளித்துவிட்டார். தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. நான் ஏற்கனவே சொன்னதை மிகத் தெளிவாகச் சொல்கிறான்.. இங்கே போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான்.
பாஜகவுக்கு 3ஆவது இடம் தான். எனவே, அவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாங்கள் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். இதனால் எங்களுக்குத் தான் ஆதரவு இருக்கும்" என்று அவர் பதிலளித்தார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications