வெளியிலிருந்து உள்ளே கொண்டு செல்லப்பட்ட பை! அதில் இருந்தது என்ன? செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திமுக நிர்வாகிகள் போராட்டம் செய்ததற்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது. உள்ளே ஐடிஅதிகாரிகளை சோதித்துவிட்டு அனுப்பியது ஏன் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 40 இடங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களின் வருமான வரித்துறையின் இந்த சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர்.
என்ன நடக்கிறது?:
இதில் ரெய்டு நடக்கும் இடத்திற்கு உள்ளே அதிகாரிகள் எதையாவது கொண்டு வைக்க வாய்ப்பு உள்ளதாக திமுகவினர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
உன் ஐடி கார்டை காட்டு.. உன் பையில் என்ன இருக்கிறது. ஏன் பையை கொண்டு செல்கிறாய் என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். வெளியில் இருந்து எதையாவது எடுத்துக் கொண்டு போய் நீங்களே உள்ளே வைக்க வந்திருக்கிறீர்களா?அரசு அதிகாரிகள் எனும் பெயரில் சோதனை செய்ய வந்திருக்கிறீர்களே? உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள்!, என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், திறந்த வீட்டுக்குள் யார் நுழைந்தாலும் யார் என்று கேட்கத்தான் செய்வார்கள். இன்னார் என்றால்,ID card கொடு என்று தான் சொல்வார்கள்! சோதனைக்கு நீங்க ஏன் பை கொண்டு போகிறீர்கள்! அதற்குள் என்ன இருக்கு என சம்பந்தப்பட்டவர்கள் கேட்க தான் செய்வார்கள்! இது ஜனநாயக நாடு! சங்கிகளே வாயை மூடு!!, என்று கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், வேலை வாய்ப்பு ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஒரு கும்பல் ஐடி அதிகாரிகளை தாக்கி உள்ளனர்.

அவர்களின் வாகனங்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது போன்ற தவறான விஷயங்களில், உங்கள் கட்சி ஆட்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கட்சி ஆட்களுக்கு ஒழுங்காக சொல்லி வையுங்கள். நீங்கள் ஆட்சி நடத்துவது ஒன்றும் 60 களில் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்கு ராஜிவ் காந்தி அளித்துள்ள பதிலில், 1975 ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பெரும் முயற்சியால் கொங்கு வேளாளர் சமூக மக்கள் தமிழ்நாட்டில் BC பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்!! அதன் பின்னர் தான் தாங்கள் OBC என்று சான்றிதழ் வாங்கி பட்டம் பெற்று,IPS ஆனீர்கள் sir... நன்றி மறப்பது நன்றன்று!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தினால் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடாக ஈர்க்கப்பட்டு வருகின்றது தமிழ்நாட்டு ஊடகங்களும்,மக்களும் முதலமைச்சரை பாராட்டுகின்றன! அதனை மறக்கடிக்க IT ரெய்டு பூச்சாண்டி! தேர்தலில் மண்ணைக் கவ்விய அண்ணாமலைக்கு கைப்பாவை வேலை செய்யும் ஒன்றிய வருமானவரித்துறை!, என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications