'இரட்டைப் புறா' சின்னத்தில் போட்டியிட்டு 'சேவல்' ஜெயலலிதாவிடம் தோற்ற வெண்ணிற ஆடை நிர்மலா!
சென்னை: எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர், அதிமுக உடைந்து, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்து, சட்டசபைத் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது, ஜானகி அணி சார்பில் இரட்டைப் புறா சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா.
அவர் எதிர்த்துப் போட்டியிட்டது, ஜெயலலிதாவை. சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார். நிர்மலா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தார்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் எம்.ஜி.ஆரி.ன் மனைவி ஜானகி, தனது அணியைக் கலைத்தார், ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்.

89ல் வந்த தேர்தல்
எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் அதிமுக உடைந்தது. ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியுமாக உடைந்தது.

ஜானகி அணியில் திருநாவுக்கரசு -பிஎச் பாண்டியன்
இதில் ஜானகி அணியில், சீனியர் தலைவர்கள் மற்றும் அப்போதைய சபாநாயகரான பி.எச்.பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றனர்.

ஜெயலலிதா பக்கம் திருநாவுக்கரசு - கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்
ஜெயலலிதா பக்கம் திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வந்து நின்றனர்.

89ல் வந்த தேர்தல்
இதையடுத்து 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. அதில் இரு அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

ஜெ.வுக்கு சேவல்.. ஜானகிக்கு இரட்டைப் புறா
இதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு சேவல் சின்னம் தரப்பட்டது. ஜானகி அணியினருக்கு இரட்டைப் புறா கிடைத்தது.

சிவாஜியுன் கூட்டணி...
ஜானகி அணி அத்தேர்தலில் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்தது. ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தார்.

திமுக பலமான கூட்டணி
மறுபக்கம் திமுக பலமான கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்தித்தது.

13 வருடத்திற்குப் பிறகு திமுக ஆட்சி
இந்தத் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது. எம்.ஜிஆர். இருந்தவரை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் அவதிப்பட்ட திமுக, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது.

வாரிசாக உருவெடுத்தார் ஜெயலலிதா
இந்தத் தேர்தலின்போது எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு தான்தான் என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். அவரது கட்சிக்கு 27 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஜானகி அணி சார்பில் பி.எச்.பாண்டியன் மட்டுமே வென்றார்.

ஜானகி தோற்றார்
இத்தேர்தலில் ஜானகி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். தொகுதி என்ற போதிலும் அவரால் 3வது இடத்தைத்தான் பெற முடிந்தது. எம்.ஜிஆரை ஏற்ற மக்கள் அவரது மனைவியைக் கைவிட்டார்கள்.

போடியில் அபாரமாக வென்ற ஜெயலலிதா
ஆனால் ஜெயலலிதாவோ, போடிநாயக்கனூரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

எதிர்த்துப் போட்டியிட்ட நிர்மலா
இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா. ஜானகி அணி சார்பி்ல் இரட்டைப் புறா சின்னத்தில் நின்றார் நிர்மலா.

வெறும் 1512 ஓட்டுக்களே
ஆனால் அவருக்கு வெறும் 1512 ஓட்டுக்களே கிடைத்தன. படு தோல்வியைச் சந்தித்தார். 4வது இடத்தைப் பிடித்தார். டெபாசிட்டையும் இழந்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications