கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்.. காவேரி அறிக்கை வெளியானது.. பெரும் சோகத்தில் திமுகவினர்!
அடுத்த அறிக்கை இன்று பிற்பகல் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்திகள் திமுகவினரை அதிர வைத்துள்ளது. பெரும் சோகத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.
நேற்று மதியம் முதல் கருணாநிதிக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக கூறி 24 மணி நேரமும் மருத்துவர்கள் குறித்துள்ளனர். இது சம்பந்தமாக 6-வது முறையாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைதான் அனைவரையுமே நிலைகுலைய வைத்துவிட்டது. முதல் முறையாக கவலைக்கிடமான வார்த்தைகளை அந்த அறிக்கை தாங்கி வந்ததே அதற்குக் காரணம்.

இரவு முழுதும் நீடிப்பு
அனைவருக்குமே மனக் கலக்கத்தை கொடுத்துவிட்டது. தமிழகத்தை பதற்றத்தில் தூக்கி உட்கார வைத்தது. அதனால் மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் முதல் திமுக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என சகலமும் குவிந்துவிட்டார்கள். அதன் விளைவு போக்குவரத்து திசை திருப்பப்பட்டு.. போலீசாரும் குவிக்கப்பட்டு.. இரவு முழுவதும் இந்த பணி நீடித்தது.

பதட்டத்தை குறைக்க முடிவு
இதனிடையே நேற்றிரவு 10 மணி அளவில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியாகும் என்றும், அவ்வாறு வெளிவராவிட்டால் இன்று காலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் ஒரு தகவல் பரவியது. கருணாநிதிக்கு கொடுக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டுவிட்டால், ஓரளவு முன்னேற்றம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுவிடும், அதனை தொண்டர்களிடம் சொல்லி அவர்களின் பதட்டத்தை குறைக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் முடிவு செய்திருந்தது.

24 மணி நேரம் முடியட்டும்
ஆனால் அறிக்கை ஏதும் இரவு 10 மணிக்கோ, இன்று காலை 6 மணிக்கோ வரவில்லை. காரணம், நேற்றே மருத்துவர்கள் 24 மணி நேரம் குறித்து வைத்துள்ளார்கள். இந்த 24 மணி முடிந்த பிறகுதான் அவரது உடல்நலம் குறித்து சொல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

பெரும் சோகம்
இந்த நிலையில்தான் இன்று மாலை காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை வெளியானது. அது திமுகவினரை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அவர்களை வேதனையில் தள்ளியுள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications