ரஜினிகாந்த் பேச்சை கேட்டு வாய்விட்டு சிரித்த கருணாநிதி.. வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனல் தெறித்த ரஜினியின் அரசியல் பஞ்ச்கள்!

சென்னை: ரஜினிகாந்த் பேச்சை கேட்டு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வாய் விட்டு சிரித்த ஒரு தருணம், சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

சந்திரமுகி திரைப்பட வெற்றி விழாவின்போது, ரஜினி பேசிய பேச்சுக்குதான் அப்போதைய முதல்வர் கருணாநிதி வாய்விட்டு சிரித்தார். தலைமை விருந்தினராக அவர் பங்கேற்றிருந்த அந்த விழாவில் நடிகர் பிரபுவும் கருணாநிதியுடன் அமர்ந்துள்ளார்.

சந்திரமுகி திரைப்படத்திற்கு முன்பு வெளியான பாபா வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. அதுவரை ரஜினி திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியை குவித்து வந்தன. எனவே பாபா படத்திற்கு பிறகு பலரும் பல விதமாக விமர்சனம் செய்தனர்.

சொல்லியடித்த சந்திரமுகி

ஆனால், நான் யானை கிடையாது. குதிரை. எழுந்து ஓடுவேன் என பஞ்ச் பேசிதான், சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கவே தொடங்கினார் ரஜினி. சொன்னபடியே செய்தும் காட்டினார். சந்திரமுகி அனைத்து தரப்பினர் வரவேற்பையும் பெற்று பட்டையை கிளப்பியது.

குட்டிக் கதை

குட்டிக் கதை

அந்த படத்தின் வெற்றிவிழாவில்தான் ரஜினிகாந்த், தவளைகளை வைத்து ஒரு குட்டி கதை சொன்னார். மேலும், நானும் காது கேட்காத தவளைதான் என அவர் குறிப்பிட்டார்.

காது கொடுப்பதில்லை

காது கொடுப்பதில்லை

விமர்சனங்களுக்கு காது கொடுத்து முன்னேற்றத்தை கெடுப்பதில்லை என்று ரஜினி அதில் ஆணித்தரமாக தெரிவித்தார். அதை நீங்களும் பாருங்கள் அதிலுள்ள அர்த்தம் தெரியும்.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

நாளை ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ள நிலையில், இந்த பேச்சும் முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினியின் கதாப்பாத்திரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது இது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The former Chief Minister and DMK Chief Karunanidhi had a laughing moment when Rajinikanth says a small story.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற