கருணாஸ் கைது செய்யப்பட்டதுதான் தாமதம்... ஆதரவாளர்கள் அலறி அடித்து ஓட்டம்!
Recommended Video

சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து அவரது ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் கொலை வெறியை தூண்டும் வகையில் பேசினார்.

கைது
இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.

ஆதரவாளர்கள்
அவரது சாலி கிராமம் வீட்டில் வைத்து கைது செய்த போலீஸார் அவரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதனிடையே அண்ணனை கைது செய்யக் கூடாது என தடுத்தவர் அவரது ஆதரவாளர்கள் அச்சம் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆதரவாளர்கள்
எனவே கருணாஸ் ஆதரவாளர்கள் புடைச்சூழாமலேயே காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதுதான் நகைப்புக்குரிய செய்தி. அண்ணன் முன்பு தாட் பூட்டுனு குதித்த ஆதரவாளர்கள் அவர் உள்ளே சென்றவுடன் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

தப்பி ஓட்டம்
மற்ற தலைவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டால் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்கு சென்று கோஷமிடுவர், ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கைதானவுடன் ஆதரவாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தது பெரும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications