ரசிகர்களுடனான ரஜினிகாந்தின் அடுத்த கட்ட சந்திப்பு எப்போது?
ரசிகர்களுடனான ரஜினி காந்தின் அடுத்த கட்ட சந்திப்பு எப்போது என்பது ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 15 மாவட்ட ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியதை போல் மேலும் 15 மாவட்ட ரசிகர்களை அவர் எப்போது சந்திக்க உள்ளது எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
ரஜினிகாந்த் தங்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்களின் அன்புக் கட்டளையை ஏற்று கடந்த மாதம் ஒரு நாளைக்கு 3 மாவட்டங்கள் வீதம் 5 நாள்களுக்கு 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி காந்த் சந்தித்தார் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் மும்பை தாராவி போன்று அரங்கம் அமைக்கப்பட்டு அங்கு மிச்சம் உள்ள படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் 10 நாள்கள் படப்பிடிப்பு முடிந்து ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியன. அவ்வாறு அவர் சென்னை வந்தால் போன முறையை போன்று அடுத்தகட்டமாக 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பணிகள் இந்த மாதம் 3-ஆவது வாரத்தில் தொடங்கப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனிலும், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications