அட, 'டெல்லிவாலா' கேஜ்ரிவால் மதுரைக்காரராமே??
மதுரை: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான அரவிந்த் கேஜ்ரிவால், மதுரையில் பிறந்தவர் என்றும், ஆனால் அவர் இரண்டு இடத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், இதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாகவும் மதுரையைச் சேர்ந்த இரண்டு வக்கீல்கள் புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
டெல்லியைக் கலக்கியதோடு, நாட்டையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் கேஜ்ரிவால். இவர் டெல்லியின் அடுத்த முதல்வராகவும் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிராக மதுரையிலிருந்து இரண்டு பேர் கிளம்பியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்களான முத்துக்குமார், ஸ்டாலின் மோகன்தாஸ் ஆகிய இருவரும் கூறுகையில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இரண்டு இடங்களில் பிறப்புச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது.

அதாவது 27.12.1970ல் கேஜ்ரிவால் பிறந்ததாகவும், அவருடைய தந்தை பெயர் ராம்ஜிராவ் கெய்வாக்ட், தாயார் பெயர் கீதாதேவி என்றும், நிலையான வீட்டு முகவரி புது டெல்லி என்றும் சான்றிதழில் உள்ளது.
அதேசமயம், குழந்தை பிறப்பின்போது பெற்றோரின் முகவரி எண்: 27, கற்பகம் நகர், மதுரை -7 என்று உள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். எனவே இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரவுள்ளோம் என்று கூறினர்.
கேஜ்ரிவால் எங்கு பிறந்தார் என்பது தெளிவுபடுத்தப்படும் வரை அவரை முதல்வராக பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரவுள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சோழவந்தான் சுப்பிரமணியம் சாமி போல...
கிட்டத்தட்ட சுப்பிரமணியம் சாமி கதை போல மாறுமோ கேஜ்ரிவால் கதை என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது. சுப்பிரமணியம் சாமியும் இப்படித்தான் திடீரென ஒரு நாள் வந்து எனக்குச் சொந்த ஊர் சோழவந்தான் என்று அத்தன பேரையும் அதிர வைத்தார்.
அதேபோல நானும் மதுரையில்தான் பிறந்தேன் என்று கேஜ்ரிவால் சொல்வாரா.. அல்லது டெல்லியில்தான் பிறந்தேன் என்று விளக்குவாரா என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications