டாஸ்மாக் கடைக்கு சென்ற கணவரை காணோம்...? நீதி கேட்கும் மனைவி !
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் மதுபான கடைக்கு மது குடிக்கச் சென்ற கணவர் வீடு திரும்பாததால், நீதி கேட்டு மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள மோதகணாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், எனது கணவர் குமார் சூளகிரி டூ உத்தனப்பள்ளி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் செல்வது வழக்கம். கடந்த ஜனவரி 19ந் தேதி இரவு 9 மணிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வழக்கம் போல் மது அருந்தியுள்ளார்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சம்பத், மது அருந்தி கொண்டிருந்த எனது கணவர் குமாரை, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளார். கணவரின் வாகனத்தையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனது கணவரை இன்ஸ்பெக்டர் சம்பத் விரட்டி அடித்துள்ளார்.
ஆனால் என் கணவர் குமார் வீடு வந்து சேரவில்லை அவரது டூ வீலர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் உள்ளது. என் கணவர் எங்கே...? அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் என்ன ஆனது என்று யசோதா புகார் மனு கொடுத்துள்ளார். புகார் மனுவிற்கு வழக்கு பதிவு செய்துள்ள இன்ஸ்பெக்டர் சம்பத்தும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படும் மணல் லாரிகளை மடக்கி வழக்குப் பதிவு செய்வதால் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் பொய் புகார் கொடுத்து போலீசை மாட்டிவிட பார்ப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். எது உண்மை என்பது குமார் கிடைக்கும் வரை மர்மமாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications