தேனியில் பயங்கரம்.. பெட்டிக்கடை நடத்திய பெண் வெட்டி படுகொலை.. பின்னணியில் பகீர்! கொலையாளி கைது
தேனி: பால் கறப்பதற்காக, விடிகாலை நேரத்தில் கிராம மக்கள் சிலர் சென்றபோதுதான், சமுத்திரத்தை அந்த கோலத்தில் பார்த்துள்ளனர். என்ன நடந்தது தேனியில்?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி.. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரம்.. 48 வயதானது.

இந்த தம்பதிக்கு 2 மகள்களும் இருக்கின்றனர்.. பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. அதேபோல, இந்த தம்பதியின் மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்..
சமுத்திரம்: அதனால், 2 மகள்களையும் வளர்த்து கல்யாணம் செய்தது சமுத்திரம்தான். முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2வது மகளை காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து தந்துள்ளார்.. இதையடுத்து, காந்திபுரம் பகுதியிலேயே சமுத்திரம், வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்கி வந்தார்.. இந்நிலையில் இன்று காலை சமுத்திரம் அவருடைய வீட்டின் முன்பு சடலமாக கிடந்தார்.. உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் கிடந்தன..
இன்று விடிகாலையில், பால் கறப்பதற்காக அங்குள்ளவர்கள் சிலர், அந்த வழியாக சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான், சமுத்திரத்தின் சடலத்தை பார்த்து அலறினார்கள்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் பறந்தது... விரைந்து வந்த போலீசார் சமுத்திரத்தின் உடலை மீட்டனர்.. அப்போதுதான், அவரது உடம்பில் கை, கால், கழுத்துக்கீழ் பகுதியில் வெட்டுக்காயங்கள் இருந்தன .
உடல் உறுப்புகள்: வெட்டுக்காயங்களால் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், கிடந்த சமுத்திரத்தின் சடலத்தை, போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கியது.. அதே பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனால், அவரை விசாரிக்கலாம் என்று போலீசார் முயன்றபோது, அவரை காணாமல் போனார்..
அதனால் சந்தேகம் அவர்மீது அதிகரித்துள்ளதால், மாயமான சொக்கரை தேடும்பணி விரைந்து நடந்தது. மகள்களை வளர்ப்பதற்காக, பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தாராம் சமுத்திரம்.. காலையில் பால் கறப்பதற்காக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, சமுத்திரத்துக்கு உயிர் இருந்திருக்கிறது.. அவரை மீட்டு, சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியும் வைத்திருக்கிறார்கள்.- ஆனால் வழியிலேயே சமுத்திரம் பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்கிறார்கள்..
சொக்கர் கைது: இதற்கிடையே தான் கைது செய்யப்பட்ட சொக்கரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சொக்கருக்கு 35 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே கொலை வழக்கில் 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார். தற்போது திருமணத்துக்கு பெண் பார்க்கும் நிலையில் அவர் பற்றி பெண்வீட்டாரிடம் சமுத்திரம் தவறாக கூறி வந்துள்ளதோடு அவரை தரக்குறைவாகவும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சொக்கர், சமுத்திரத்தை அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications