அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே.. பாமக வழக்கில் ஐகோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்!
எம்எல்ஏக்களை விடுவிக்கக் கோரி பாமக வழக்கறிஞர் பாலுவால் தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏக்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரணை நடத்திய பின் அறிக்கை ஒன்றை போலீசார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த கையோடு, சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா என்பதை விசாரணை நடத்திய பின்னர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து, 130 அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு பாமக வழக்கறிஞர் பாலு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இது தவிர, கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிசலாவால் அடைக்கப்பட்ட பின்னர், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரனை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதாவை ஆஜர்படுத்தவும் என்றும் 2 ஆட்கொணர்வு மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
பாமக தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் காஞ்சிபுரம் எஸ்பி. கூவத்தூர் சென்று, சுதந்திரமாக எம்எல்ஏக்கள் இருக்கிறார்களா என்று விசாரணையை மேற்கொண்டார். பின்னர், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு, கூவத்தூர் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பகுதியில் 1000 ரவுடிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற விடுதியில் எம்எல்ஏக்கள் இருப்பதாக முதலில் அரசு தரப்பு தெரிவித்திருந்தது. பின்னர் எம்எல்ஏ விடுதியில் இல்லை என்று அரசு தரப்பு மறுக்கிறது. எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக கூறினாலும் அவர்கள் ஏன் இன்னும் வெளியே வரவில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர் புகார் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications