ஜெ.வுக்காக சகல மருத்துவ வசதிகளுடன் ரெடியாக இருக்கும் போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா!
அப்பல்லோவிலிருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆன உடன் அவர் போயஸ் கார்டனிலா? சிறுதாவூரா? எங்கு செல்வார் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக சிகிக்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. சிறுதாவூர் பங்களாவும் போயஸ்கார்டன் இல்லமும் அனைத்து மருத்துவ வசதிகளும் அடங்கிய இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. டாக்டர்கள் மட்டும் போனால் போதுமாம். மற்றபடி எதுவும் தேவையில்லை. அந்தளவுக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறதாம்.

சில உயர்சிகிச்சைக்கான கருவிகளை சமீபத்தில் லண்டனிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். அந்த கருவிகளை மட்டும் அமைப்பதற்கான இட வசதி போயஸ் தோட்டத்தில் இல்லை. அதனால் அந்த கருவிகள் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டுப்போகப்பட்டுள்ளது. தற்போது, 8 ஜோதிடர்கள் அடங்கிய குழு ஒன்று சில பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.
அந்த பூஜை முழுமைப்பெற்றதும் ஜோதிடர்கள் குறித்துக்கொடுக்கும் தேதியில் அப்பல்லோவிலிருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவார். அன்றைய சூழல் பொறுத்து கார்டனா? சிறுதாவூரா? என முடிவெடுக்கப்படும் என்று சசிகலா தரப்பிடமிருந்து தகவல் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications