அழைத்து தான் போனேன் என்கிறார் வைகோ: அழைக்கவே இல்லை என்கிறார் அழகிரி
மதுரை: அழகிரி அழைப்பின் பேரில் தான் அவரது வீட்டிற்கு சென்றேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இந்நிலையில் வைகோவை வீட்டுக்கு அழைக்கவே இல்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் உள்ள மு.க. அழகிரியின் வீட்டுக்கு வந்தார். அவர் அழகிரியை சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியை கேட்டுக் கொண்டார். அழகிரியும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று கூறி வைகோவை அனுப்பி வைத்தார்.
அழகிரியின் வீட்டில் இருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அழைப்பு
அண்மையில் நானும், அழகிரியும் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தோம். அப்போது அவரிடம் எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டேன். அவர் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் அழைப்பின்பேரில் தான் இன்று அவரை சந்தித்து பேசினேன் என்றார் வைகோ.

பழைய நினைவுகள்
அழகிரியை வீட்டில் சந்தித்தபோது இருவரும் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டோம். 1993ம் ஆண்டு நான் அழகிரியை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார் என்று வைகோ தெரிவித்தார்.

டிஸ்மிஸ்
அழகிரியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அவர் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருணாநிதி கூறினார். டிஸ்மிஸுக்கு முன்பு தான் வைகோ அழகிரியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிரி
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அழகிரி முன்னணி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் வைகோவை வீட்டுக்கு வருமாறு அழைக்கவே இல்லை. வீட்டுக்கு வந்தவரை எப்படி தடுத்து அனுப்பியா வைக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

முரண்பாடு
அழகிரி அழைத்து தான் அவரது வீட்டிற்கு சென்றேன் என்றார் வைகோ. ஆனால் நான் வைகோவை வீட்டுக்கு அழைக்கவே இல்லை என்கிறார் அழகிரி.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications