ஓபிஎஸ்ன்னா! சேகர் ரெட்டியோடு இருந்தாரே அவர்தானே... நாஞ்சில் சம்பத் நக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ன்னா யாருங்க?, சேகர் ரெட்டியோடு இருந்தாரே அவர்தான் என்று நாஞ்சில் சம்பத் நய்யாண்டி செய்தார்.

சென்னை அடையாறில் டிடிவி தினகரனை சந்தித்து விட்டு செய்தியாளர்களை நாஞ்சில் சம்பத் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ்ன்னா யாருங்க, இந்த சேகர் ரெட்டியோடு இருந்தாரே அவர்தானே.

Who is OPS, Was he Sekar Reddy's close, says Nanjil Sampath

ஊழல் குறித்து பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அருகதையும் இல்லை. ஓபிஎஸ் இருக்கும் இடத்தை தேடி எந்த நிர்வாகியும் செல்வதில்லை. ஆனால் டிடிவி தினகரனை சந்திக்க தினந்தோறும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

ஓபிஎஸ் நடத்தும் பொதுக் கூட்டங்களில்கூட ஏற்கெனவே வந்த கூட்டத்துக்கு வந்தவர்களே வருகின்றனர். புதிதாக யாரும் வருவதில்லை. அதிமுக டிடிவி தினகரன் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.

அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது. ஜெயலலிதாவால் எந்த பதவியும் கொடுக்காமல் இருந்த ஜெயகுமாருக்கு மீனவரணி செயலாளர் பதவியை வாங்கி தந்தது சசிகலா. நிதி அமைச்சராக்கியவர் டிடிவி தினகரன் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nanjil Sampath says that There will be no rights to talk about scandal for OPS who was in contact with Sand Mafia Sekar Reddy.
Please Wait while comments are loading...