வைத்திலிங்கத்தை தண்ணீர் குடிக்கவைத்த முன்னாள் ‘வலது கை’.. யார் இந்த சேகர்? எடப்பாடி உடனடி ‘கிஃப்ட்’?
சென்னை : அமமுகவில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த மா.சேகர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கத்துக்கு தண்ணி காட்டிய சேகர், ஈபிஎஸ் பக்கம் சேர்ந்துள்ளது டெல்டாவில் அவரது தரப்பை வலுவாக்கியுள்ளது. அவருக்கு மா.செ பதவி வழங்கப்படும் என பேச்சுகள் எழுந்துள்ளன.
அதிமுகவில் இணைந்துள்ள சேகர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக இருக்கிறார். இவர்தான் அமமுக சார்பில் இருந்த ஒரே பேரூராட்சி தலைவர் ஆவார். அவரும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். ஒரத்தநாடு அமமுக ஒன்றிய செயலாளர்கள் ஆசைதம்பி, சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

டெல்டா மண்டலத்தில் அமமுகவை வலுவாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த தூணாக, டிடிவி தினகரன் பெரிதும் நம்பிய மா.சேகர், அதிமுகவில் இணைந்துள்ளது அமமுக கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சேகர் இணையப்போகும் தகவல் தெரியவந்ததும், இன்று காலையிலேயே அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

ஒன் மேன் ஷோ : கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக பெரிய அளவில் சோபிக்கவில்லை. தஞ்சாவூர் ஒரத்தநாடு பேரூராட்சியில் மட்டுமே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது அமமுக. 15 வார்டுகள் கொண்ட ஒரத்தநாடு பேரூராட்சியில் 9 வார்டுகளில் அமமுகவை வெல்ல வைத்தவர் மா.சேகர். சேகர் 8-வது வார்டிலும், அவரது மனைவி திருமங்கை சேகர் 11-வது வார்டிலும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் ஆனார் மா.சேகர்.
ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராகவும், அவருக்கு வலது கரமாகவும் செயல்பட்டவர் தான் இந்த மா.சேகர். தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக, அதிமுகவின் அறிவிக்கப்படாத சோழ மண்டல தளபதியாக வைத்திலிங்கம் பணியாற்றிய போது, தஞ்சை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார் சேகர். ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராகவும் இருந்தார்.
வைத்திலிங்கம் - டிஷ்யூம் : ஒரத்தநாடு பகுதி கட்சித் தொண்டர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்து மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்தவர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் எம்.பி சீட் கேட்டு வைத்திலிங்கத்தின் ஆதரவோடு காத்திருந்தார். ஆனால், வைத்திலிங்கம் வேறொருவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, அவர் வெற்றி பெற்றார். தான் பெரிதும் நம்பிய வைத்திலிங்கம் தன்னை ஏமாற்றி விட்டதாக புழுங்கி, அவரை விட்டு ஒதுங்கினார் சேகர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டார். அறுதிப் பெரும்பான்மையோடு தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், வைத்திலிங்கம் தோல்வி அடைந்தார். வைத்திலிங்கத்தின் அன்றைய தோல்விக்கு சேகர் தரப்பினர் செய்த உள்ளடி வேலைகள் தான் காரணம் எனக் கூறப்படுவதுண்டு. அந்தளவுக்கு ஒரத்தநாட்டில் தனது கரத்தை பலமாக வைத்திருந்தார் சேகர். பின்னர், வைத்திலிங்கத்தை ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி ஆக்கியது தனிக்கதை.

டெல்டாவில் எடப்பாடி ஆதிக்கம் : பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காட்சிகள் மாறி, தினகரன் தனிக்கட்சி தொடங்கியபோது, தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இணைந்தார் சேகர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பைப் பெற்று டெல்டாவில் அமமுகவை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடம்பிடித்தார்.
இதையடுத்துத்தான் உள்ளாட்சி தேர்தலில் ஒரத்தநாடு பேரூராட்சியைக் கைப்பற்றி, அமமுக பேரூராட்சி தலைவராக இருக்கும் ஒரே பேரூராட்சி என்ற பெயரைப் பெறவைத்தார். இந்நிலையில், அவர் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இந்தச் செய்தி தினகரன் மட்டுமல்லாமல் ஓபிஎஸ் அணியினருக்கும் இடியாக அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பு தற்போது காலியாக உள்ளதால் மா.சேகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications