புஷ்பவனம் பீச்சில் "கசமுசா".. இந்தம்மாவுக்கு 43 வயசு.. அதுயாரு பக்கத்துல? அட காலக்கொடுமையே.. தேவையா?
நாகப்பட்டினம்: "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.. 43 வயது கள்ளக்காதல், வாரிசுருட்டி தடம்தெரியாமல் அழித்து விட்டு போய்விட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.. மனைவி பெயர் துர்கா தேவி.. 43 வயதாகிறது.. இவர்களுக்கு தினேஷ் என்ற 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
துர்காதேவி கடந்த 18ம் தேதி நைட் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.. மகளிர் சுயஉதவி குழு கடன் தொகையை கட்டுவதற்காக செல்வதாக கூறி சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு, வீட்டுக்கு திரும்பவில்லை.. மறுநாள் காலை, புஷ்பவனம் பீச்சில், துர்காதேவி இறந்து கிடப்பது தெரியவந்தது.

இவர்கள் வசிக்கும் தேத்தாகுடியிலிருந்து, இந்த பீச் 10 கி.மீ தொலைவில் உள்ளது.. இதனால் குடும்பத்தினர் பதறிப்போய் பார்த்தபோது, புஷ்பவனம் கடற்கரையில் தலையில் காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்திருக்கிறது.. உடனடியாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து கிளம்பி வந்தனர்.
விசாரணை: இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர்.. இந்த விசாரணையின்போதுதான், துர்கா தேவியின் கள்ளக்காதல் அம்பலமானது.. 43 வயது துர்காவின், கள்ளக்காதலனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. அதாவது தன்னுடைய சொந்த மகனின் வயது.
அழகுக்கண்டர்காட்டை சேர்ந்த அந்த கள்ளக்காதலன் பெயர் அருண்.. இந்த வழக்கில் இவரது பெயர் அடிபட்டதுமே, போலீசார் அருணை பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், அருண் ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் என்ற தகவல் தெரியவந்தது.. சேலம் தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் வருட மயக்கவியல் படிப்பு படித்து வருகிறாராம்..
பிசினஸ்: ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் செய்து வந்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து, அவைகளை வேதாரண்யம் பகுதியில் வாட்ஸ் அப் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்தாராம்.. இதை பார்ட்-டைம் வேலையாக செய்து வந்திருக்கிறார்.
அப்படி மளிகை பொருட்களை விற்கும்போதுதான், கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இது நாளடைவில் தகாத உறவாக மாறியிருக்கிறது.. இதையடுத்து 2 பேருமே அடிக்கடி தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. துர்காதேவிக்கு அருண், அடிக்கடி பணமும் தந்து வந்திருக்கிறார்.. சமீபத்தில் அருண் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்..

ஆத்திரம்: அன்றைய தினம் 2 பேருமே தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. அப்போது, துர்கா தேவிக்கு ஒன்றரை பவுன் நகையை, பரிசாக தந்திருக்கிறார் அருண். அப்படித்தான், சம்பவத்தன்றும், புஷ்பவனம் பீச்சில் துர்காதேவியுடன், மாணவர் அருண் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டிருக்கிறார்.. அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று அருண் சொன்னாராம்.. இதுவே 2 பேருக்கும் வாக்குவாதமாக மாறியிருக்கிறது..
அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால், இந்த தகாத உறவை வெளியே சொல்லி விடுவேன், அப்பறம் உன் எதிர்காலமே பாழாகிவிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.. பீச்சிலேயே 3 முறை காரை ஏற்றி கொன்றிருக்கிறார்.. இதில் துர்காதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்தது.. இவ்வளவு விசாரணையில் உறுதியானதையடுத்து, அருணை போலீசார் கைது செய்துள்ளனர்..
கொடுமை: இந்த கொலை சம்பவத்தை கண்டுபிடிக்க போலீசார் நிறையவே மெனக்கெட்டுள்ளனர்.. மகளிர் குழுவுக்கு பணம் கட்டுவதாக சொல்லிவிட்டு போன, துர்காதேவியை அன்றைய நாள் முழுவதும் காணாமல், கணவரும், மகனும் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள்.. இரவெல்லாம்கூட தேடியலைந்திருக்கிறார்கள்.
ஆனால், மறுநாள் காலை, புஷ்பவனம் பீச்சில் படுகாயங்களுடன் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் அந்த பகுதிகளில் பரவியிருக்கிறது.. அதை பார்த்துவிட்டுத்தான், குடும்பத்தினர் அலறியடித்து பீச்சுக்கு ஓடியிருக்கிறார்கள்..
அப்போது உடலில் பலத்த காயங்களுடன் துர்காதேவி சடலமாக இருந்துள்ளார்.. உடலில் தலை, கை, கால் உள்பட பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்துள்ளன. அத்துடன், துர்காதேவி அணிந்திருந்த சங்கிலி, தோடு உள்பட 10 பவுன் நகைகள், செல்போன், வெள்ளிக்கொலுசு என மொத்தமும் மாயமாகி இருந்தது.
செல்போன்: முதலில் போலீசார், நகைக்காக இந்த கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்றுதான் சந்தேகித்துள்ளனர்.. ஆனால் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, துர்காதேவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் மட்டுமே அவரது செல்போன் வேலை செய்துள்ளதும், அதற்கு பிறகு சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததும் தெரியவந்துள்ளது.. இதற்கு பிறகே தனிப்படை போலீசார் இறக்கிவிடப்பட்டு, துர்காதேவி செல்போனையும் டிரேஸ் செய்தபிறகுதான், அவரிடம் கடைசியாக பேசிய கொலையாளி சிக்கி உள்ளார்.
3 முறை : சில வாரங்களுக்கு முன்பு, அருணிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை துர்காதேவி பிடுங்கி கொண்டாராம்.. அதனால்தான் இப்போது பணம்தர முடியாது என்று அருண் மறுத்தாராம்.. இதனாலேயே சண்டையும் ஏற்பட்டுள்ளது..
தகராறு நடந்தபோது, இருவருமே காருக்குள்தான் இருந்திருக்கிறார்கள்.. அப்போது ஆத்திரத்தில், காரிலிருந்து துர்காதேவியை வெளியே தள்ளிவிட்டாராம் அருண். அதற்கு பிறகே 3 முறை அவர்மீது கார் ஏற்றி கொன்றுள்ளார். சடலத்தை அங்கிருந்த புதர் பகுதியில் இழுத்து போட்டுவிட்டு, நகையையும் எடுத்து கொண்டு தப்பியதாக தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார்
கலிகாலம்: தன் மகனின் வயசு என்றுகூட பார்க்காமல், தானும் அநியாயமாய் செத்து, ஒரு மாணவனின் வளமான வாழ்க்கையையும் சீரழித்துவிட்டது அந்த, பாழாய்போன கள்ளக்காதல்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications