தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?
சென்னை: அனுப் ஜெய்ஸ்வால் விரைவில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவியேற்கக்கூடும் என காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு தகவல் பரவி வருகின்றது.
தமிழக டிஜிபியாக ராமானுஜம் இருந்து வந்தார். இவருக்கு பதவி காலம் முடிந்த பின்பும் பதவி நீட்டிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த அளவு ராமானுஜம் மீது முதல்வர் தனி மரியாதை வைத்துள்ளார்.
இந்த நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது தமிழக டிஜிபியாக ராமானுஜம் செயல்படக் கூடாது என சில எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், வரும் பிப்ரவரி மாதம் தமிழக டிஜிபியாக ராமானுஜம் பதவிக்காலம் முடிவடைகின்றது.
இதனையடுத்து டிஜிபி பதவியில் இருந்து ராமானுஜம் மாற்றப்படலாம் என்ற தகவல் காவல்துறை வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில், தமிழக உளவுத்துறை டிஜிபி அசோக்குமார் அல்லது காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் அனுப் ஜெய்ஸ்வால் டிஜிபியாக பதவியேற்கலாம் என கூறப்படுகின்றது.
அதே வேளையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மிகவும் நேர்த்தியாக பாராமரிப்பதாக டிஜிபி ராமானுஜம் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதால் அவரே மீண்டும் இந்த பதயில் தொடராலம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications