அனல் பறக்கும் அருப்புக் கோட்டை.. திமுக-அதிமுகவில் மோதும் சீனியர்கள்! "விஐபி" தொகுதியில் என்ன நிலவரம்
அருப்புக்கோட்டை: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியர் தலைவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுக தரப்பில் அந்த கட்சி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் என இரு விஐபிகள் போட்டியிடுவதால் அனல் பறக்கிறது அருப்புக்கோட்டை தொகுதி களம்.
இன்று நேற்று கிடையாது. அருப்புக்கோட்டை எப்போதுமே விஐபி தொகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வரானபோது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அருப்புக்கோட்டை.
இந்த தேர்தலில் மீண்டும் அங்கு விஐபிகள் மோதிக் கொள்வதால் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

திமுக சிட்டிங் எம்எல்ஏ
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பலம் இந்த தொகுதிக்கு அவர் மிகமிக பரிச்சயமானவர். சிட்டிங் எம்எல்ஏ. அனைவரும் அண்ணாச்சி என்று உரிமையோடு அழைத்து பேசும் அளவுக்கு உறவைப் பேணி வருகிறார். தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக திமுகவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறார். இதுதான் அவருக்கு மிகப்பெரிய பலம்.

பிரச்சாரம்
வைகைச் செல்வனைப் பொறுத்தளவில், பத்து ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருப்பதால் இயல்பாக எழும்பக்கூடிய எதிர்ப்பு அலைகளை சமாளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால் அவர் பேச்சு திறமை மிக்கவர். அதிமுக செய்தி தொடர்பாளராக இருப்பவர். எனவே தனது பிரச்சாரத்தின் மூலம் அதை ஈடு கட்டி வருகிறார்.

மக்கள் நீதி மய்யம்
திமுக தரப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது என்கிறார்கள். தொகுதியில் புகழ்பெற்ற குடும்பம் ஜெயவிலாஸ். அந்த குடும்பத்தை சேர்ந்த உமாதேவி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கணிசமாக தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட தொகுதி என்பதால் அந்த வாக்குகளை இவர் ஈர்த்து விடுவார் என்ற ஒரு சந்தேகம் திமுக தரப்புக்கு இருக்கிறது.

ஏற்கனவே போட்டி
2016 ஆம் ஆண்டு வைகைச்செல்வன் இந்த தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. கடைசி நேரத்தில் வாக்காளர்களை "கைவிட்டுவிட்டதுதான்" அவரது தோல்விக்கு காரணம் என்கிறார்கள். அந்த நினைவு இப்போது பசுமை போல இருப்பதால் இந்த முறை, கைவிடமாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளாராம் வைகைச்செல்வன்.

தேமுதிக நிலை
தேமுதிக வேட்பாளராக ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். முதலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது வேட்பாளரை அறிவித்தது, பிறகு தேமுதிக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். எனவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்குள் நிலவும் சில அதிருப்தி இவருக்கு ஓட்டுக்களை செல்ல விடாமல் தடுத்து விடும் என்ற அச்சம் இருக்கிறது தேமுதிக தரப்பு. ஆகமொத்தம் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரிக்கும் வாக்குகளை வைத்து இந்தத் தொகுதியில் யார் வெற்றி தோல்வி என்று தீர்மானிக்கப்பட உள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
-
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை!












Click it and Unblock the Notifications