ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
அரசியலில் நடிக்க விருப்பமில்லை என்று அதிமுகவில் இருந்து விலகிய நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
சென்னை: சினிமா, சீரியலில் நடிப்பதைப் போல அரசியலில் தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தினாலே அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் இரு அணிகளுக்கும் மாறி மாறி சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரச்சார களத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகை ஆர்த்தி அதிமுகவை விட்டு விலகி விட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.

நடிக்கத் தெரியாது
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்த்தி, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, ஒவ்வொருவரும் அரசியல் நாடகம் போடுகிறார்கள். எனவே, கட்சியில் இருந்து விலகுகிறேன். எனது, ராஜினாமா கடிதத்தை தலைமை அலுவலகத்தில் யாரை சந்தித்துக் கொடுப்பது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

குழப்பமாக உள்ளது
உலகமே, இவர்களின் கூத்தை பார்த்து சிரிக்கிறது. நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். மக்கள் முன் நடிக்க விரும்பவில்லை. அரசியலில் நடிக்கத் தெரியாததால் கட்சியில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

எந்த அணியிலும் இல்லை
என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஒரு அணிக்கு அனுப்பினால் வேறு அணியில் இருப்பவர்கள் தன்னை அந்த அணியைச் சேர்ந்தவர் என்று நினைப்பார்கள். நான் எந்த அணியிலும் இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் நீடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய, கட்சி பொறுப்பு அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் பறிபோனதை அரசியல் ரீதியான தோல்வியாகக் கருதி, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நடிகை ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications