அப்செட் ஆன அழகிரி.!... பொதுக்குழுவில் ஆப்சென்ட்!!
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அழகிரி பங்கேற்கவில்லை. இதை ஊடகங்களும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.
காரணம் காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி' இல்லை என்ற செய்தி பிரதானமாகிப் போனதால், அழகிரி தி.மு.க. பொதுக் குழுவைப் புறக்கணித்த விவகாரம் பெரிதுபடுத்தப்படவில்லை.
எனினும் அழகிரியின் பொதுக்குழு புறக்கணிப்பு குறித்து கட்சிக்குள் பலதரப்பட்ட கருத்துகள் அலசப்படுகின்றன.

அஞ்சா நெஞ்சன்
அஞ்சா நெஞ்சன்.... எதிர்கால எஜமானன் என்றெல்லாம் போஸ்டர் அடித்து மதுரை கலக்குவார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அடுத்தமாதம் வரவிருக்கும் பிறந்தநாளுக்கு இப்போதிருந்த போஸ்டர் ஒட்ட இடம் பிடித்து காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்களை கலங்கடிப்பது அவரது அப்செட்தானாம்.

அமைதியான அழகிரி
கிரானைட் வழக்கில் மகன் துரை தயாநிதி மீது வழக்கு, தனது சகலமுமாய் இருந்த 'பொட்டு'சுரேஷ் கொலை - அடுத்தடுத்து நடந்துவிட்ட இவ்விரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அழகிரி ரொம்பவே அமைதியாகி விட்டாராம்.

பயம் காரணமா?
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே அழகிரி கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை. ஆளும் தரப்பில் சூழ்ச்சி செய்து தனக்கும் தனது மகனுக்கும் ஏதாவது நெருக்கடிகளை உண்டாக்கிவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு. கேட்டவர்களுக்கு, 'அண்ணனுக்கு கால் வலி.. கண் வலி' எனக் காரணம் சொல்லி சமாளிக்கின்றனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

ஒட்டு மொத்த புறக்கணிப்பு
இந்நிலையில்தான் திமுக பொதுக்குழு வுக்கு போவதா வேண்டாமா என்று விசுவாசிகள் கேட்டபோது, ‘பொதுக்குழுவுக்குப் போய்தான் என்ன ஆகப் போகிறது? நான் போகவில்லை; நீங்கள் மனசாட்சிப் படி நடந்து கொள்ளுங்கள்'என்று மையமாக சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாராம் அழகிரி. அண்ணனே போகாதபோது நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கிவிட்டனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

கூச்சல் குழப்பம்
அழகிரியின் ஆதரவாளரான தலைமைச் செயற்குழு உறுப்பினர் முனியாண்டி, ‘தென் மாவட்ட தி.மு.க.வில் அழகிரியை கேட்காமல் தலைமை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று பொதுக்குழுவில் பேசியதற்கு கூச்சல் போட்டு அவரை உட்கார வைத்துவிட்டனராம்.

கட்சி ஒற்றுமை
அப்போது அழகிரி இருந்திருந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும். இப்படித்தான் 2011ம் ஆண்டு பொதுக்குழுவின் போது காலையில் போயிருந்த அழகிரி மாலையில் ஆப்சென்ட் ஆனார் காரணம் கூட்டத்தில் பேசிய அனைவரும் ஸ்டாலினை தலைவராக்கவேண்டும் என்று பேசியதான் என்று கூறப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு நடந்து விடக்கூடாது என்றுதான் கூட்டத்தை புறக்கணித்தாராம் அழகிரி.

அழகிரி அப்செட்
காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்ற முடிவை அழகிரி அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

எத்தனை போராட்டம்
"பொதுக்குழுவில் தனது கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு அழகிரி எதற்காக புறக்கணிக்க வேண்டும்? என்று கேட்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்பவர், கட்சியை வலுப்படுத்த தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினார். எத்தனை கூட்டங்களில் முழங்கினார்?'' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

போஸ்டரில் பதில்
மொத்தத்தில் அழகிரியின் அப்செட்தான் பொதுக்குழுவிற்கு ஆப்சென்ட் ஆகக் காரணம் என்று கூறுகின்றனர். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அடுத்த மாதம் பிறந்தநாள் விழா போஸ்டர்களில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications