காவிரி மேலாண்மை வாரியம் இல்லை 'ஸ்கீம்' தான்... அப்ப மத்திய இணை அமைச்சர் சொன்னது பொய்யா?
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது என்பது மத்தியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் தான். இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல என்பதை இன்றைய ஆலோசனை கூட்டத்தின் மூல
Recommended Video

சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் என யார் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் தமிழகம் வஞ்சிக்கப்படுவதென்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் கூறிய நிலையில், அப்படி ஒரு அம்சமே தீர்ப்பில் இல்லை என்று இன்று நீர்வளத்துறை செயலாளர் பல்டி அடித்துள்ளார்.
காவிரி நீர் அது கானல் நீராகி பல ஆண்டுகளாகிறது. 1978களில் தொடங்கிய காவிரி நீர் பங்கீடு விவகாரம் 2018லும் முற்றுபெறாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதலில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீர் கொடுக்க வழங்கப்பட்ட தீர்ப்பு 2007ல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் போது 192 டிஎம்சியாக குறைந்தது.
சரி அந்த நீரையாவது கர்நாடகா தந்ததா என்றால் கிடையாது, நீரை தராததற்கு அவர்கள் சொல்லும் சாக்கு வறட்சி. எங்கள் மாநிலத்திற்கே தண்ணீர் போதவில்லை என்பது தான், ஆனால் உண்மையில் காவிரி நீர் அவர்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை கொண்டாடுவது தவிர இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.

முழு அளவு நீரை வாங்க முடியவில்லை
தமிழக அரசும் பல முறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு, மேல்முறையீடு செய்து தீர்ப்பை மட்டுமே வாங்கி வந்ததே தவிர அவர்களிடம் இருந்து ஒரு வருஷம் கூட தீர்ப்பு படி முழு அளவு நீரையும் வாங்க முடியவில்லை. இந்த பிரச்னையில் மத்தியில் இருக்கும் அரசுகள் எப்போதும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன.

காவிரி அரசியலும் மத்திய அரசுகளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்த போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது, என்றாலும் காவிரி விஷயத்தில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணெய் என்ற போக்கை தான் கடைபிடித்தது. அவர்களே அப்படி என்றால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக கொடியை பறக்க விட நினைக்கும் பாஜக அரசு மட்டும் இதில் நடுநிலையோடு நடந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த காவிரி நீர் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கான நீரின் அளவு மேலும் 14 டிஎம்சி குறைக்கப்பட்டது. எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது திருப்தியளிப்பதாக நிம்மதியடைந்தனர் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும்.

மத்திய அரசின் அணுகுண்டு
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங் புதிய குண்டை வீசியுள்ளார். காவிரி நீரை வழங்குவதை கண்காணிக்க ஒரு ஸ்கீம் மட்டுமே அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னதாக புதிய விளக்கத்தையும் அவர் தந்துள்ளார்.

கர்நாடகா ஏன் தீர்மானம் போட்டது?
அப்படியானால் கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று போட்ட தீர்மானம் எதற்காக? என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் ஏன் அவசர அவசரமாக நேற்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அமைச்சருக்குத் தெரியாதா?
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினார். நீர்வளத்துறை செயலாளருக்கு தெரிந்த விஷயம் மத்திய இணை அமைச்சருக்கு தெரியாதா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications