நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்றவாதி வைகோவுக்கு மலேசியா தடை- கள்ள மவுனம் சாதிக்கும் மத்திய அரசு!
தலைசிறந்த நாடாளுமன்றவாதியான வைகோவுக்கு மலேசியா தடை விதித்துள்ள விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது மத்திய அரசு.
சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு மலேசியா தடை விதித்துள்ளதை கண்டும் காணாமல் மத்திய அரசு கள்ள மவுனம் சாதிப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் ராஜ்யசபா எம்.பியாக பல ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தை தமது ஆணித்தரமான குரல்களால் அதிர வைத்தவர் வைகோ. இந்திரா காந்தியோடும் ராஜீவ் காந்தியோடும் ராஜ்யசபாவில் மல்லுக்கட்டியவர் வைகோ.
ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ் காந்தியை, மிஸ்டர் ராஜீவ்காந்தி என விளித்து எச்சரிக்கை செய்தவர். இன்று தமிழர்களைப் பொறுக்கி என இழித்து பேசும் சுப்பிரமணியன் சுவாமியின் அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையில் நாடாளுமன்ற வளாகத்திலேயே, யெஸ் வி வில் கில் யூ என பதிலடி தந்தார் வைகோ. உடனே அய்யய்யோ எனக்கு வைகோ கொலை மிரட்டல் விடுக்கிறார் என மத்திய அரசிடம் அலறிப் போய் தஞ்சமடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

வாஜ்பாயின் செல்லப்பிள்ளை
வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன்சிங் என நாட்டின் பிரதமர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்ட சிறந்த நாடாளுமன்றவாதி வைகோ. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவின் முதுபெரும் தலைவர் வாஜ்பாயின் செல்லப்பிள்ளையாகவே திகழ்ந்தவர் வைகோ. தமக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதும் அதை கட்சியினருக்காக தாரைவார்த்து கொடுத்தவர்.

சிறந்த நாடாளுமன்றவாதி
வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள் என்னதான் கருத்து வேறுபாடு இருக்கலாம்.. ஆனால் நாடு போற்றிய ஒரு நாடாளுமன்றவாதியை மலேசியா நாடு அவமதிக்கிறது; இந்திய குடிமகனே அல்ல... இலங்கைவாசி என திட்டமிட்டு அவமதித்து திருப்பி அனுப்புகிறது.

மவுனம் காக்கும் மத்திய அரசு
இச்செய்தி வெளியான நிலையில் கொந்தளித்திருக்க வேண்டிய இந்திய மத்திய அரசு கள்ள மவுனம் காக்கிறது. செவ்வாய்கிரகத்தில் சிக்கினாலும் இந்திய தூதரகம் உதவி செய்யும் என வாய்ச்சவடால் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு இப்போது மலேசியா செவ்வாய்கிரகத்துக்கு அப்பால் இருக்கிறது போல் தெரிகிறது.

வைகோவை அவமதிப்பதா?
லோக்சபா தேர்தலின் போது வைகோவை வானளாவ புகழ்ந்த பாஜக தலைவர்கள் அவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் மவுனிகளாக இருப்பதுதான் அவரை மதிக்கும் லட்சணமா? வைகோ சென்றது மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வரின் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள... வைகோ ஆபத்தானவர் என்றால் உங்க நாட்டு மாகாண துணை முதல்வரும் ஆபத்தானவரா? என எதிர்கேள்வி கேட்டு மடக்க வேண்டிய மத்திய வெளியுறவுத்துறை எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல்தான்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications