"வறண்ட" பாலைவனமான சென்னை.. வருடாந்திர அக்னி வெயில் அளவை காட்டிலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. ஏன்?
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயிலை விட சென்னையில் கடந்த சில நாட்களாக அதிக வெயில் சுட்டெரிப்பதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே வெப்பம் தாள முடியாது. அதிலும் கோடையில் கத்தரி வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை கத்தரி வெயில் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 28 ஆம் தேதி முடிவடைகிறது.

இதன்பிறகு வெயில் ஒன்று முதல் இரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும் என கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் உஷ்ணம் தாங்க முடியவில்லை. நாள்கணக்கில் ஏசி ஓடியது ஓடியபடியே இருக்கிறது.
ஒரு பக்கம் கரென்ட்பில்லை நினைத்து வருந்தினாலும் பாலைவனத்தை விட மோசமான சூழலை கொடுக்கும் இந்த வெயிலை நினைத்தால் சற்று அச்சமாக இருக்கிறது. தோல் வியாதிகள், கொப்புளங்கள், வியர்க்குரு உள்ளிட்டவை ஏற்பட்டுவிட்டால் அதனால் அவதிப்பட வேண்டும் என்பதால் கரென்ட் பில் போனாலும் பரவாயில்லை என்கிறார்கள்.
ஏசி இல்லாத வீடுகளில் வடிவேல் காமெடியை போல் அடியே மாலாதாங்க முடியலை, ஃபேனை 12 ஆம் நம்பர்ல வை என சொல்லும் அளவுக்கு அனல் கக்குகிறது. தீப்பிழம்பு உடலில் பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. காலை, மதியம்தான் இப்படி இருக்கிறது என பார்த்தால் மாலை நேரத்திலும் குளிர்ந்த காற்றே இல்லை. கடந்த திங்கள்கிழமை முதல் முறையாக வெப்பநிலை சென்னையில் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது சென்னையில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தின்போது ஏற்படும் வெயிலின் அளவை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இந்த திடீர் வெயிலின் தாக்கத்திற்கு காரணம் மோக்கா புயல் என சொல்லப்படுகிறது.

மோக்கா புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடதிசையில் நகர்ந்து சென்ற போது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது. வறண்ட காற்றால் ஏற்படும் வெப்பம் அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் உருவாகியுள்ளது.
2 அல்லது 3 நாட்களில் இதே நிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறுகையில் வெயில் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மோக்கா புயல், காற்றில் ஈரப்பதம் இல்லாதது, வறண்ட காற்று வீசுவது உள்ளிட்டவைகள் ஆகும். செவ்வாய்க்கிழமை நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு மே 20 ஆம்தேதி நுங்கம்பாக்கத்தில் 41.8 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகியிருந்தது என்றார். எனவே காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்கிறார்கள். உணவு டெலிவரி செய்வோர், ஆப் மூலம் ஆர்டர் செய்யப்படும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்வோர், சேல்ஸ்மேன்கள் உள்ளிட்டோர் இந்த வெப்பத்தால் அவதியடைகிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications