நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ? கேட்கிறார் ஜெ.அண்ணன் மகள் தீபா !

என் அத்தையைப் போல் ஒருவரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே நான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தீபாவை அதிமுக தொண்டர்கள் அரசியலுக்கு அழைக்கின்றனர். அதிமுகவின் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே தீபா தொலைக்காட்சிகள், ஊடகங்களுக்கு பேட்டியளித்து பரபரப்பை ஏற்பபடுத்தி வருகிறார்.

 Why did I not come to politics? says jayallaithaa's nice

இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தீபா அளித்த பேட்டியில், அத்தை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவர் உடனிருந்தவர்களிடம் இருந்து சிகிச்சை குறித்து விளக்கம் வேண்டும்.

ஏனேனில் அவர்கள் தான் என்னை மருத்துவமனைக்குள் வரக்கூடாது என தடுத்தனர். எனவே அவர்கள் தான் இதுகுறித்து விளக்கம் வேண்டும் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எனவே தான் நான் உள்பட அரசியல்வாதிகள் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர்.

அத்தையைப் போல் ஒருவரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தையோட சாயலில் நான் இருந்தாலும் அவரது மறைவுக்கு பின்னர் நான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. நான் ஏன் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இருக்க கூடாது. சரியான முறையில் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிமுக-வில் இணைவேன்.சசிகலாதான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என தெளிவுபடுத்தவில்லை. மக்களின் விருப்பத்தால் தான் நான் அரசியலுக்கு வருவேன். ஜனநாயக அரசியலில் ஆரோக்கியமான போட்டி இருப்பது சகஜம்தான் என்றார் தீபா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+