சல்லி சல்லியா விழுதே.. "ஓபிஎஸ் கையில் இபிஎஸ்".. பன்னீருக்கு பறந்த மேட்டர்.."இதை" மட்டும் செய்யாதீங்க
சென்னை: அதிமுகவே பரபரத்து காணப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார்.. இதன் பின்னணி என்ன? ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்?
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது..
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, வேட்பு மனு தாக்கலில், தவறான தகவலை அளித்ததாக எடப்பாடி மீது புகார் எழுந்துள்ளது.. அதாவது, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மிலானி என்பவர், கடந்த மாதம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை தந்திருந்தார்.

வேட்பு மனு:
இந்த புகாரில், எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.. இந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி பிரமாண பத்திரத்தில், சொத்து விவரம் பற்றிய தவறான தகவல்கள் அளித்திருக்கிறார்.. அதனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையும் விசாரணை நடத்தி உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்று கோர்ட் தெரிவித்தது.. அத்துடன், விசாரணை அறிக்கையை மே மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கலைவாணி குற்றப்பிரிவு காவல்துறைக்கு, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார்.. இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை துவங்கினர்.
அசையும் சொத்துக்கள்:
கடந்த ஒரு மாதமாகவே இந்த விசாரணை நடந்து வந்தது.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி வங்கி கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், படிப்பு போன்றவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டனர்... இறுதியில், விசாரணை அறிக்கையை சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலும் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
அறிக்கையில் சொத்து விவரம் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசாரிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
சாட்சியம் ஓபிஎஸ்:
இந்த வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார்... காரணம், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், அன்று கையழுத்திட்டதால், இப்போது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். புகார்தாரரான மிலானி கொடுத்த மனுவில், ஓபிஎஸ் சாட்சியாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சொன்னதன் அடிப்படையிலேயே, இந்த வழக்கில் ஓபிஎஸ்ஸை சாட்சியாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது..
அதுமட்டுமல்ல, வழக்கறிஞர் மிலானி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையிலும் குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது...
டபுள் சிக்கல்:
இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடிக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கின் போக்கினை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்காணித்து வருகிறதாம்.. மற்றொருபுறம், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாவட்ட காவல்துறையும் தயாராகி வருகிறதாம்..
உண்மையா? :
எடப்பாடிக்கு எதிராக கேஸ் போட்டிருக்கும் மிலானி என்பவர், ஓபிஎஸ்சுக்கு தெரிந்தவர் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கொளுத்திப் போட்டுவரும் சூழலில், இந்த வழக்கின் சாட்சியாகவே, ஓபிஎஸ்ஸை கொண்டுவர திட்டமிடப்பட்டதாம்.. அதனால்தான், அவரை இந்த வழக்கில் வலிய சேர்த்திருக்கிறதாம்...
ஆனால், எடப்பாடிக்கு எதிரான வழக்கில், சாட்சி சொல்ல போலீஸ் வலியுறுத்தினால் அதனை ஏற்கக்கூடாது என்றும், ஒருவேளை சாட்சி சொல்ல ஒப்புக்கொண்டால் அவரது அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது என்றும் ஓபிஎஸ்சிடம் சொல்லியிருக்கிறார்களாம் அவரது நலம் விரும்பிகள்.. அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் சாட்சியமானது, இந்த வழக்கில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது..!!!
அதேசமயம், புகார் கொடுத்துள்ளவர் தந்த தகவல்கள் உண்மைதானா என்பதை கண்டறிய வருமான வரித்துறை, வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆவணங்களை காவல்துறையினர் பெற்று வருகின்றனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை அனைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
கிளைமாக்ஸ்:
இதனிடையே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகின்ற 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளதும், சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
"சட்டம் தன் கடமையை செய்யட்டும்" என்று சொல்லாமல், கோர்ட்டுக்கு ஓடிச்சென்று எடப்பாடி பழனிசாமி ஏன் தள்ளுபடி கேட்கிறார்? என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.. மற்றொருபுறம், "நான்தான் ஒருங்கிணைப்பாளர்" என்று இப்போதுவரை சொல்லிவரும் ஓபிஎஸ், இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications