கதவை சாத்திய காதலி.. திருப்பத்தூர் ஜன்னலில் பறந்து வந்த தீக்குச்சி.. உயிரோடு கொளுத்தப்பட்ட மஞ்சுளா
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நத்தம் பகுதியில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த காதலன் பெட்ரோல் ஊற்றி அவரை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டார்.. இது தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலனை திருப்பத்துபோலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் என்பவருடைய மனைவி மஞ்சுளா. இவருக்கு 42 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். கமலேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். இதையடுத்து கணவனை இழந்த மஞ்சுளாவிற்கு,அதேப் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான குப்பன் (51) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

குப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இதனிடையே குப்பன் மஞ்சுளா இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல் வாழத்தொடங்கினர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவும், குப்பனும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர்.
இதனிடையே குப்பனும், மஞ்சுளாவும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்த காலக்கட்டத்தில், மஞ்சுளாவிற்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் குப்பன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதனை குப்பன் திருப்பி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவிற்கும், குப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறதுது. அப்போது ஆத்திரமடைந்த குப்பன் கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளாவின் மீது ஊற்றினாராம். உடனே மஞ்சுளா குப்பனை வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் விடாத குப்பன், கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து வேகமாக கொளுத்தி ஜன்னல் வழியாக தீப்பற்றிய நிலையில் தீக்குச்சியை போட்டுள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவி மஞ்சுளா அலறி துடித்திருக்கிறார்.
மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, மஞ்சுளாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் குப்பனை கைது செய்தனர். குப்பனுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.இந்த கொலை தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கள்ளக்காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications