Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முள்ளங்கி சாம்பாரை" ஊற்றி ஊற்றியே.. உயிர்களை "காலி" செய்த கீதா.. மெடிக்கல் ஷாப் ஓடிய கள்ளக்காதலன்

Subscribe to Oneindia Tamil

விருதாச்சலம்: உயிர்களை துடிதுடிக்க கொன்ற இளம்பெண்ணை, ஒன்றரை வருடங்கள் கழித்து போலீசார் கைது செய்துள்ளார்கள்.. என்ன நடந்தது? யார் அந்த பெண்?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது இலங்கியனூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்த தம்பதி சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள்.. இவர்களது மகன் வேல்முருகன்..

என்ன நடந்தது: இவருக்கு 40 வயதாகிறது.. வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்... மனைவி பெயர் கீதா.. 33 வயதாகிறது.. இவர்களுக்கு அகிலேஷ்வர் என்ற 12 வயது மகனும், சரவணகிருஷ்ணன் என்ற 6 வயது மகனும் உள்ளனர்..

Why did young woman take this sudden decision and what happened near Virudhachalam

இந்நிலையில், கடந்த 2021 டிசம்பர் 29ம் தேதி, வழக்கம்போல் வீட்டில் கீதா சமையல் செய்து கொண்டிருந்தார்.. முள்ளங்கி சாம்பார் வைத்திருக்கிறார்.. அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிஉள்ளார் கீதா.. சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், சரவணகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.. இவர்களுடன் பக்கத்து வீட்டு குழந்தைகள் 8 வயது நித்தீஷ்வரன், 4 வயது பிரியதர்ஷினி என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர்.

ரசம் சாதம்: ஆனால் வேல்முருகன் மட்டும் சாம்பாரை சாப்பிடவில்லை. ரசத்தை ஊற்றி சாப்பிட்டுள்ளார்... அனைவரும் சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்தில், கொளஞ்சியம்மாள், சுப்ரமணியன், சரவணகிருஷ்ணன், நித்தீஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனால், ஒவ்வொருவராக மயங்கி விழ தொடங்கினர்.. இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு, கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்..

Why did young woman take this sudden decision and what happened near Virudhachalam

பிறகு அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மருக்கு மாற்றப்பட்டனர்.. ஆனால், கொளஞ்சியம்மாள் உயிரிழந்துவிட்டார்.. மறுநாளே சுப்ரமணியனும், அடுத்தடுத்த நாட்களில் பக்கத்து வீட்டு நித்தீஷ்வரனும் பரிதாபமாக இறந்துவிட்டனர்..
2 பேர் தப்பினர்: இதில் சிறுவர்கள் சரவணகிருஷ்ணன் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 2 பேர் மட்டுமே அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதெல்லாம் பார்த்து வேல்முருகன் அதிர்ந்து போனாரே தவிர, மனைவி மீது எந்த சந்தேகமும் வரவில்லை.. பிறகு, மங்கலம்பேட்டை போலீசாரிடம் வேல்முருகன் புகார் தந்தார்.. ஆனால், இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர்.

இதனிடையே, இறந்த 3 பேரின் சடலங்கள் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், 3 பேரின் சாப்பாட்டிலும், எலி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது.. இதற்கு பிறகு, உணவில் விஷம் கலந்தது யார்? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.. ஆனால், எந்தவித க்ளூவும் யாருக்கும் கிடைக்கவில்லை.. இப்படியே ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன.. இதற்கு பிறகுதான், சந்தேகத்தின் அடிப்படையில் கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், கீதாவின் கள்ளக்காதல் அம்பலமானது.

Why did young woman take this sudden decision and what happened near Virudhachalam

முள்ளங்கி சாம்பார்: இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "கீதாவின் அப்பா பெயர் பூமாலை.. இவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.. வேல்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தபோது, ஹரிஹரன் என்பவருடன் கீதாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்.. 43 வயதாகிறது..

இந்த விஷயம் கீதாவின் மாமியாருக்கு தெரிந்துள்ளது.. அதனால் மருமகளை கண்டித்துள்ளார்... அப்போதும் மருமகள் அடங்காததால், வேல்முருகனுக்கு போனை போட்டு விஷயத்தை கூறியுள்ளார். வேல்முருகன் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, ஒட்டுமொத்த மாமியார் குடும்பத்தையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே, முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்து உள்ளார்.

எஸ்.ஐ. மகள்: எல்லாருக்குமே முள்ளங்கி சாம்பாரை ஊற்றி சாப்பிட வைத்துள்ளார்.. இந்த எலிபேஸ்ட்டை கீதாவுக்கு கள்ளக்காதலன் ஹரிஹரன் கடைக்கு சென்று வாங்கி வந்து தந்திருக்கிறார்.. அவரிடமும் விசாரணை நடத்தியதில், உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.. இப்போது கள்ளக்காதலர்கள் 2 பேருமே கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒன்றரை வருடங்கள் கழித்து குற்றவாளிகள் கைதாகி உள்ளனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+