"வார்த்தைய" விட்ட கமல்ஹாசன்.. இப்படி அவரை "கை" விட்டுட்டாரே.. கடைசிவரை நம்பிய மேலிடம்..பறந்த உத்தரவு
சென்னை: கமல்ஹாசன் ஏன் இப்படி செய்தார்? என்று டெல்லி மேலிடமே குழம்பி போயுள்ளதாம்.. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிநாளான இன்று, மிகுந்த பரபரப்பு செய்தி ஒன்று வலம்வந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே, ராகுல் காந்தியுடன் நெருக்கம் பாராட்டி வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டிருந்தார்..
ஏற்கனவே, கமல் மீது திமுக ஒரு கண் வைத்துள்ளதாக தெரிகிறது.. குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் கமல்...

வோட் வங்கி: தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இப்போது வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்ட நிலையிலும், மய்யத்துக்குள் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் திட்டமிடுவதாக தெரிகிறது.
அதனால்தான், காங்கிரசுக்கு கமல் ஆதரவு தந்ததுடன், இடைத்தேர்தலில் நேரடி பிரச்சாரத்தையும் கமல் மேற்கொண்டபோது, அது கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நம்பிக்கை கமல்ஹாசன்: அதேபோல, கமலின் வருகையையும் காங்கிரஸ் பெரிதும் எதிர்நோக்கியபடியே உள்ளது.. முக்கியமாக ராகுல் காந்தி கமல் மீது தனிப்பட்ட பிரியத்தையும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்.. தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், காங்கிரசுக்கு கமல் போன்ற ஒரு முகம் இன்றைய தினம் தேவையாக இருக்கிறது.. அது ராகுலுக்கு வலு சேர்க்கும் என்றும் நம்பப்பட்டும் வருகிறது.. நாடு முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதுடன், அந்தந்த மாநில மொழிகளில் பிரச்சாரமும் செய்து, வாக்குகளையும், ரசிகர்களையும் தன்பக்கம் கவரும் திறமை உடையவர் கமல்ஹாசன்..
கர்நாடக தேர்தலையும் தாண்டி, தேசிய அளவில், கமலுக்கு இதெல்லாம் பிளஸ் பாயிண்ட்டாகவும் அமையும் என்று சொல்லி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரம், கோவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள் பலர் கருந்துரையாற்ற நிறைவாக கமல்ஹாசன் பேசினார்.
ராகுல்காந்தி: கமல்ஹாசன் அப்போது பேசும்போது, ராகுல் காந்தி தன்னிடம் செல்போனில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.. அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கமல் அப்போது தெரிவித்திருந்தார்.. அதாவது, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ராகுலை காந்தியே விரும்புவதாக தெரிகிறது.. இந்த விருப்பத்தை கமலிடம் சொல்லவும், அதற்கு கமலும் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

இப்போது விஷயம் என்னவென்றால், காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுலிடம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கமல். பிரச்சாரம் செய்ய கர்நாடகாவுக்கு போகவேயில்லையாம்.. இன்றுதான் பிரச்சாரம் செய்ய கடைசி நாளாகும்.. இறுதி நிமிடம்வரை வரை கர்நாடகாவுக்கு கமல் செல்லவில்லை..
என்ன காரணம்: அதுமட்டுமல்ல, கடந்த 5,6,7 ஆகிய தேதிகளில் கமலிடம் பேச தொடர் முயற்சிகளை எடுத்திருக்கிறார் ராகுல்காந்தி... ஆனால், கமலின் தொடர்பு கிடைக்கவே இல்லையாம்.. அகில இந்திய காங்கிரசின் செய்தி தொடர்பாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் கமலை தொடர்புகொள்ள முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தொடர்பு கிடைக்கவில்லை. இதனை ராகுலிடம் காங்கிராஸார் சொல்லி உள்ளனர்.. அதற்கு ராகுல், "அவரை விட்டுவிடுங்கள், இனி அவர் வரத்தேவையில்லை. யாரும் முயற்சிக்காதீர்கள்" என்று அட்வைஸ் செய்துள்ளராம்.
ஆனாலும், கமல் ஏன் பிரச்சாரத்துக்கு கர்நாடகா செல்லவில்லை? ஏன், நம்முடைய ஃபோனை கூட அவர் அட்டென்ட் பண்ணவில்லையே? என்று குழம்பியபடியே இருக்கிறராம் ராகுல் காந்தி..!!












Click it and Unblock the Notifications