நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையான்னே தெரியவில்லை: சரத்குமார்
நாகர்கோவில்: அனைத்து கட்சிகளும் தேமுதிகவை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்பதே புரியவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது தான். ஆனால் இந்த சலுகைகளை எல்லாம் முன்பே அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்போம். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதே தெரியவில்லை. அது பற்றி கூட்டணியின் தலைவியான ஜெயலலிதா தான் கூற வேண்டும். நான் கூட்டணி தலைவர் அல்ல. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் தான்.
கூட்டணி குறித்து யாரும் இதுவரை என்னிடம் பேசவில்லை. அதனால் யார் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் நிச்சயம் அறிவிப்பேன். நாங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். என்ன மாற்றம்? மக்களுக்கு எத்தகைய மாற்றம் வேண்டும்? என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிப்போம்.
அனைத்து கட்சிகளும் தேமுதிகவை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்பதே புரியவில்லை. தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வந்தால் விகிதாச்சார அடிப்படையில் வலுவடையும் என்று நினைக்கிறார்கள் போல.
பாஜக தனியாக விடப்படவில்லை என்பது என் கருத்து. இம்மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவாகும் என்று பாஜக தெரிவித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications