அத்தனை பேர் இருக்க.. இவர் மட்டும் சிக்கியது ஏன்? திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் ஐடி ரெய்டு.. யார் இவர்
சென்னை: ஜி ஸ்கொயர் நிறுவன ரெய்டுக்கு இடையில் திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. யார் இந்த திமுக எம்எல்ஏ மோகன்.. ஏன் அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது?
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சார்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

ரியல் எஸ்டேட் தொழில் துறையில் தமிழ்நாட்டில் முன்னணி நிறுவனமாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்ததாக பாஜக, அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார். இதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும் கடுமையான புகார்களை அவர் பட்டியலிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் இவர்களின் சொத்து உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் விளக்கம்;இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தவறானது. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல.
ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயலால் ஜி ஸ்கொயர் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. ஜி ஸ்கொயர் சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது.
இந்த நிலையில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நெருக்கமாக இருந்ததால் இவர் ரெய்டில் சிக்கி உள்ளார்.

யார் இவர்?:எம் கே மோகன் திமுக சார்பாக அண்ணா நகர் எம்எல்ஏவாக இருக்கிறார். 2016ல் இருந்து அந்த தொகுதி எம்எல்ஏ இவர்தான். அரசியல் கடந்த இவர் பல்வேறு பிஸ்னஸ் செய்து வருகிறார். செங்கல் வியாபாரம், கட்டுமான கற்கள் வியாபாரம் என்று பல்வேறு வியாபாரம் செய்து வருகிறார்.
ரியல் எஸ்டேட் பணிகளையும் செய்து வருகிறார்,. இவர் கடந்த முறை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவிலேயே 211 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அதிகாரபூர்வமாக கணக்கு காட்டினார்.
அதேபோல் 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கணக்கு காட்டி இருந்தார். இவர் அரசியல் கடந்து பல்வேறு பிஸ்னஸ்களை செய்து வரும் நிலையில் தற்போது ரெய்டில் சிக்கி இருக்கிறார்.
ஏன் ரெய்டு?
இவரின் மகன் கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. கார்த்திக் தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மேற்பார்வை பணிகளை செய்யும் நிர்வாகியாக இருக்கிறார். அதனால் அவர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications