சுண்டைக்காய் கட்சி ஆள் என்னை மிரட்ட முயற்சி செய்வது காமெடியாக உள்ளது: குஷ்பு
சென்னை: சுண்டைக்காய் கட்சி ஆள் எல்லாம் என்னை மிரட்ட முயற்சி செய்வது காமெடியாக உள்ளது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தான் இவ்வளவு பாடுபட்டும் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல், ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு சினிமா வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Find it so funny when someone tries to threaten me at the strength of some peanut sized political party..all I do is scoff at their weakness</p>— khushbusundar (@khushsundar) <a href="https://twitter.com/khushsundar/statuses/499923573729800192">August 14, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சுண்டைக்காய் அளவு கட்சி ஆதரவில் ஒருவர் என்னை மிரட்ட முயற்சி செய்வது காமெடியாக உள்ளது. அவர்களின் பலவீனத்தை பார்த்து சிரிக்கத் தான் செய்கிறேன். நான் யாருக்கு பின்னாலும் நிற்கவில்லை. நான் என் மனசாட்சியை தவிர வேறு எதற்கும் பயப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications