'வனத்துறை' அமைச்சராக இருந்த ஆனந்தனுக்கு 'வனவாசம்' ஏன்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இருந்த இடம்பெற்றிருந்த 'வனத்துறை' ஆனந்தனுக்கு கல்தா கொடுக்கப்பட்டதன் பின்னணியில் பல சுவாரசிய தகவல்கள் உலா வருகின்றன..
தமிழகத்தின் முதல்வராக இன்று ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

வழக்கமாக தனித்தனியாக அமைச்சர்கள் பதவியேற்பது போல் இல்லமால் 14, 14 பேராக பிரிக்கப்பட்ட கோரஷாக அமைச்சர்கள் பதவியேற்றனர். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இதுவரை அமைச்சராக இருந்த இருவர் இடம்பெறவில்லை.
பல மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் செந்தூர் பாண்டியன் கழற்றிவிடப்பட்டார். வனத்துறை இலாகா அமைச்சராக இருந்த ஆனந்தனும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மீது அவ்வளவு என்ன முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோபம் என விசாரிக்கையில், அமைச்சர்கள் எண்ணிக்கை 28 தான் இருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்பினாராம்.. அதுதான் ராசியான எண்ணாம்.. அதனால் கழற்றிவிடப்பட்டார் என்கின்றனர்.
அதே நேரத்தில் பெண் ஒருவரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆனந்தன் மீது புகார் கூறப்பட்டதாலேயே அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்..
இதுதான் வனத்துறை அமைச்சர் ஆனந்தனின் கல்தா பின்னணியாம்!












Click it and Unblock the Notifications